விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கின்றது. அந்த வகையில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியும் மிகவும் பிரபலம்தான். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலரும் தற்போது சினிமாவில் கலக்கி வருகிறார்கள். சின்னத்திரையில் பிரபலமான நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக இருப்பவர் டிஎஸ்கே என்கின்ற திருச்சி சரவணா குமார்.
இவர் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் அசாருடன் இணைந்து செய்யும் நகைச்சுவையைக் காணவே தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றது. சின்னத்திரை மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்த அசத்தி வருகிறார். டிஎஸ்கே கலக்கப்போவது யாரு சீசன் 8 கோப்பையை வென்று தற்போது பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.
இவர் பல குரல்களை மாற்றிப் பேசுவதில் மிகச் சிறந்தவர். இவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை இருக்கின்றது. சமீபத்தில் நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் தனது தம்பியை பற்றி மிகவும் பெருமையாக பேசி இருந்தார்.
அதாவது தன்னுடைய கெரியருக்காக தன் தம்பி அவனுடைய கேரியரை விட்டுக் கொடுத்தான். முழு நேரமும் எனது தந்தையை கவனித்து வந்தான். தந்தை இறந்த பிறகு தான் தற்போது அவன் சினிமாவில் முயற்சி செய்து வருகிறான். எனக்காக அவன் செய்த தியாகத்தை என்னால் மறக்க முடியாது என்று மிகவும் உருக்கமாக பேசியிருந்தார்.
இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…
உலகக் கோப்பை கால்பந்து 2026 தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 (Round of 16) சுற்றில், நார்வே அணியிடம் 2-1…
ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…
கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…