தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஷால் செல்லமே, சண்டைக்கோழி, திமிரு ஆகிய படங்களின் மூலம் பிரபலமானார். இவர் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பதவியில் உள்ளார். சமீபத்தில் விஷால், எஸ்.ஜே சூர்யா நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பெற்றது.
இந்நிலையில் விஷால் நடித்த தாமிரபரணி, பூஜை ஆகிய படங்கள் மெகா ஹிட் ஆனது. அந்த படங்களை இயக்கிய ஹரி மூன்றாவது முறையாக விஷாலுடன் இணைந்துள்ளார். விஷால் நடிக்கும் இந்த 34-ஆவது படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். இந்நிலையில் விஷால் நடிக்கும் 34-வது படத்தில் கௌதம் மேனன் சமுத்திரகனி ஆகியோர் இணைந்துள்ளனர். அதனை உறுதிப்படுத்தும் வகையில் விஷால் தனது சமூக வலைதள பக்கத்தில் கௌதம் வாசுதேவ் மேனன், சமுத்திரக்கனி, ஹரியுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
அந்த புகைப்படத்தில் இருக்கும் சமுத்திரகனி, கௌதம் வாசுதேவ் மேனன், ஹரி ஆகியோரை தனித்தனியாக எடுத்துக் கொண்டாலே அவர்களின் படங்கள் ஹிட் ஆகும். அப்படி இருக்க முன்னணி நட்சத்திரங்களை ஒரே திரையில் காண்பிக்க போவதால் படம் பிரம்மாண்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் அடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.
இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…
உலகக் கோப்பை கால்பந்து 2026 தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 (Round of 16) சுற்றில், நார்வே அணியிடம் 2-1…
ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…
கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…