`கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் குரேஷி. `குக்கு வித் கோமாளி’ இவருக்கென தனியொரு அடையாளத்தை பெற்றுத்தந்தது. தொகுப்பாளராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

Kuraishi in ipl scam
இந்நிலையில் குரேஷி ஒரு வீடியோவில், `ஐபிஎல் டிக்கெட் நம்ம சேனலில் கொடுக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கோம். சேனலை சப்ஸ்கிரைப் பண்ணி அதை ஸ்கிரீன் ஷாட் எடுத்து வைச்சிக்கோங்க. மொத்தம் 40 பேருக்கு டிக்கெட் கொடுக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கோம். அதுக்கு நீங்க `madras_vlogs’ இன்ஸ்டாகிராம் பேஜை ஃபாலோ பண்ணிட்டு, லைக் பண்ணிட்டு அதை நம்ம இன்ஸ்டாகிராம் ஐடிக்கு மெசேஜ் பண்ணுங்க.

Kuraishi ipl
அப்படி பண்ற ஐடியில் இருந்து மொத்தம் 40 பேருக்கு ஃப்ரீயா ஐபிஎல் டிக்கெட் கொடுக்கப் போறோம். நம்ம சேனலை ஃபாலோ பண்ணாதவங்க பண்ணிடுங்க!’ எனப் பேசியது போன்ற வீடியோ இன்ஸ்டாகிராமில் ரீல்ஸாக ஷேர் செய்யப்பட்டிருக்கிறது. அந்த வீடியோவின் தொடக்கத்தில் மட்டுமே குரேஷி பேசியிருப்பார். மற்ற விஷயங்கள் எல்லாம் வெறுமனே வாய்ஸ் ஓவராக மட்டுமே இருந்தது. இதை பார்த்த நெட்டிசன்கள், ஐபிஎல் டிக்கெட் ஆன்லைனில் மட்டும் தான் கிடைக்கும். ஆன்லைனில் அறிவித்ததில் இருந்தே டிக்கெட் வாங்குவதற்கு பலருமே போராடிக் கொண்டிருக்கிறார்கள். எப்படி ஃப்ரீ பலருமே குரேஷி? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

Kuraishi explanation about ipl scam
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள குரேஷி, “போன ஐபிஎல் சமயத்துல என்னுடைய யூடியூப் சேனலில் ஒரு கான்டெஸ்ட் வச்சிருந்தேன். என் யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் பண்ணி ஸ்கிரீன்ஷாட் அனுப்ப சொல்லியிருந்தோம். அப்படி அனுப்புனவங்கள்ல இருந்து கான்டெஸ்ட்ல ஜெயிச்சவங்க யாருங்கிறதையும் யூடியூப் சேனலில் அறிவித்து அவங்களுக்கு சொல்லியிருந்த மாதிரி ஃப்ரீ டிக்கெட்ஸூம் கொடுத்தோம். இப்படி நாம எப்பவோ பேசினதை இப்போ பேசின மாதிரி தானே பகிர்ந்துட்டு இருக்காங்க. எப்பவோ காணாம போன குழந்தையை கண்டுபிடிச்ச பிறகும் குழந்தையைக் காணோம்னு செய்தியைப் பரப்பிட்டே தானே இருக்காங்க. அப்படித்தான் என் வீடியோவையும் இப்படி பயன்படுத்தியிருக்காங்க!” என்றார்.
