என் வாழ்நாள் சாதனையாக நினைக்கிறேன்.. வயதான வாட்ச்மேன்-க்கு மிகப்பெரிய உதவி செய்த KPY பாலா.. வைரலாகும் வீடியோ..!!

By Priya Ram on மே 26, 2024

Spread the love

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் பாலா. முன்னதாக இவர் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார். இவரை பலரும் KPY பாலா என்று அழைக்கின்றனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவது, ஏழை எளியோருக்கு உதவி செய்வது என தன்னால் முடிந்த சேவையை செய்கிறார்.

மனைவியா இப்படி பொண்ணு தான் வேணும் - KPY பாலா போட்ட கண்டிஷன்! - தமிழ்நாடு

   

இந்த நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் KPY பாலா செய்யும் அனைத்து உதவிகளிலும் தனது பங்கு இருக்கும் என ஏற்கனவே கூறியிருந்தார். அதன்படி KPY பாலாவும் ராகவா லாரன்சும் இணைந்து கணவரை இழந்த பெண்ணுக்கு ஆட்டோ வாங்கி கொடுத்தனர். கழிப்பறை இல்லாத பள்ளிக்கு கழிப்பறை கட்டி கொடுத்தனர்.

   

KPY Bala: ``ஹீரோவா மக்கள் என்னை ஏத்துக்கணும்!- KPY பாலா - Tamil News - Latest Tamil News - Breaking News

 

கடந்த ஒன்றாம் தேதி ராகவா லாரன்ஸ் மாற்றம் என்ற சேவையை தொடங்கினார். அதில் அவர் வளர்த்த பிள்ளைகள் உட்பட பலரும் இணைந்து தங்களால் முடிந்த உதவிகளை செய்து வந்தனர். KPY பாலாவும் மாற்றம் என்ற சேவையில் இணைந்தார். மாற்றம் என்ற சேவை மூலம் ராகவா லாரன்ஸ் ஏழை எளிய விவசாயிகளுக்கு ட்ராக்டர் வாங்கி கொடுத்தார்.

#image_title

இந்த நிலையில் KPY பாலா வயதான வாட்ச்மேனுக்கு தனது சொந்த செலவில் வீடு கட்டி கொடுத்துள்ளார். அதனை தனது வாழ்நாள் சாதனையாக நினைக்கிறேன் எனக்கூறி அந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் நடிகர் ராகவா லாரன்ஸ் வந்து பாலா கட்டிய வீட்டினை திறந்து வைக்கிறார். அதனை பார்த்த ரசிகர்கள் பாலாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.