42 வயதில் 3-வது திருமணம் செய்த பிரபல நடிகை..இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்..!!

By admin on வைகாசி 26, 2024

Spread the love

பிரபல நடிகையான மீரா வாசுதேவன் கடந்த 2021-ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான காவேரி சீரியல் மூலம் தனது பயணத்தை தொடங்கினார். இதனையடுத்து பெண், சூரியவம்சம், சித்தி 2 ஆகிய சீரியல்களில் நடித்தார். பின்னர் வெள்ளித் திரையிலும் அடங்கமறு, ஜெர்ரி, ஆட்டநாயகன் உள்ளிட்ட படங்களில் மீரா வாசுதேவன் நடித்துள்ளார்.

article_image1

   

உன்னை சரணடைந்தேன் படத்திற்காக இவருக்கு தமிழ்நாடு அரசின் விருது வழங்கப்பட்டது. கடந்த 2005-ஆம் ஆண்டு ஒளிப்பதிவாளர் அசோக் குமாரின் மகனான விஷால் அகர்வாலை மீரா வாசுதேவன் திருமணம் செய்து கொண்டார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2010-ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.

   

article_image2

 

இதனையடுத்து பிரபல வில்லன் நடிகரான ஜான் கொகேன் என்பவரை கடந்த 2012-ஆம் ஆண்டு மீரா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2016-ஆம் ஆண்டு தனது இரண்டாவது கணவரையும் மீரா பிரிந்து விட்டார். அதன் பிறகு திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தார்.\

article_image5

இந்நிலையில் 42 வயதாகும் மீரா வாசுதேவன் ஒளிப்பதிவாளரான விபின் என்பவரை கடந்த 21-ஆம் தேதி மீரா வாசுதேவன் திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் பங்கேற்றனர். கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் இருவரும் இணைந்து வேலை பார்த்து வந்தனர். பின்னர் நட்பு காதலாக மாறி திருமணம் செய்து கொண்டனர். திருமண புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அதனை பார்த்த ரசிகர்கள் மீரா வாசுதேவனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.