பன்னீர் புஷ்பங்கள் படத்தில் நடித்த நடிகை இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா..? லேட்டஸ்ட் போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!!

By Priya Ram on மே 26, 2024

Spread the love

நடிகை சாந்தி கிருஷ்ணா 80-களில் சிறப்பான படங்களில் நடித்து பிரபலமானவர். கேரளாவை பூர்வீகமாக கொண்ட சாந்தி கிருஷ்ணா மும்பையில் பிறந்து வளர்ந்தார். கடந்த 1981-ஆம் ஆண்டு ரிலீசான சிவப்பு மல்லி என்ற திரைப்படம் மூலம் தமிழ் திரை உலகில் என்ட்ரி கொடுத்தார்.

   

ரோஜா, ஸ்ரீதேவி, குஷ்பூ ஆகிய நடிகைகள் சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வந்த காலத்திலேயே சாந்தி கிருஷ்ணாவும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தார். இவர் சிறப்பான கதைக்களம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்தார்.

   

 

இயக்குனர் விசு சாந்தி கிருஷ்ணாவுக்கு மணல் கயிறு படத்தில் நடித்த வாய்ப்பு கொடுத்தார். இதனையடுத்து சிம்லா ஸ்பெஷல் படத்தில் சாந்தி கிருஷ்ணா எஸ்வி சேகருக்கு ஜோடியாக நடித்தார். பன்னீர் புஷ்பங்கள் படம் சாந்தி கிருஷ்ணாவுக்கு திருப்புமுறையாக அமைந்தது.

இந்த படத்தில் இடம்பெற்ற ஆனந்த ராகம் என்ற பாடல் இன்றுவரை ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. இதனை தொடர்ந்து அஜித்தும் விஜயும் சேர்ந்து நடித்த நேருக்கு நேர் படத்தில் சாந்தி கிருஷ்ணா ரகுவரனின் ஜோடியாக நடித்திருந்தார்.

இப்போது மலையாள திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் சாந்தி கிருஷ்ணா நடித்து கொண்டிருக்கிறார். அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அதனை பார்த்த ரசிகர்கள் பன்னீர் புஷ்பங்கள் படத்தில் நடித்த சாந்தி கிருஷ்ணாவா இது? ஆள் அடையாளமே தெரியாமல் மாறிட்டாரே என கமெண்ட் செய்து வருகின்றனர்.