#image_title
விஜய் டிவி கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் தோன்றியாதன் மூலம் பிரபலமானவர்தான் பாலா. காரைக்காலில் பிறந்து வளர்ந்தவர் பாலா. சினிமாவில் வரவேண்டும் என்ற ஆசையுடன் சென்னைக்கு வந்தார்.
ஆனால் சென்னைக்கு வந்தவுடன் அவருக்கு எந்தவித வாய்ப்பும் அமையவில்லை. அப்போது சின்னத்திரையில் பணியாற்றும் அமுதவானனின் ஆதரவை பெற்றார். அவர் மூலம் விஜய் டிவியில் அது இது எது போன்ற காமெடி நிகழ்ச்சிகளில் நடிக்க ஆரம்பித்தார் பாலா.
2017 ஆம் ஆண்டு கலக்கப்போவது யாரு காமெடி நிகழ்ச்சியில் தோன்றியாதன் மூலம் பிரபலம் அடைந்தாதால் தனது பெயருக்கு முன்னால் கலக்கப்போவது யாரு KPY பாலா என்று வைத்துக்கொண்டார். அதற்கு அடுத்ததாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக வந்ததன் மூலம் பேரும் புகழும் அடைந்தார் பாலா.
இது தவிர சில படங்களிலும் தோன்றியிருக்கிறார் பாலா. இவர் மற்றவற்றில் பிரபலம் அடைந்ததை காட்டிலும் இவர் இயலாதாவர்களுக்கு உதவுவதன் மூலம் பிரபலம் அடைந்து வருகிறார். மாற்று திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் வாங்கிக் கொடுப்பது பஸ் சேவை இல்லாத ஊர்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கி தருவது போன்ற பல உதவும் செயல்களை செய்து வருகிறார் மற்றும் அது வீடியோவாகவும் அவ்வபோது வெளிவரும்.
இந்நிலையில் தற்போது இன்று தீபாவளியை முன்னிட்டு KPY பாலா ஆதரவற்றவர்களை துணி கடைக்கு கூட்டிச்சென்று அவர்களுக்கு விருப்பமான துணியை வாங்கி கொடுத்து இருக்கிறார். இது பார்ப்பதற்கே மனதிற்கு மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
புதிய தொழிலில் ஆர்வம் உள்ள இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக, தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு…
சின்னத்திரை நடிகை மன்யா ஆனந்த், நடிகர் தனுஷின் மேலாளர் ஸ்ரேயஸ் தன்னை ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்காக தொடர்புகொண்டு, ஒப்பந்தம் செய்ய…
வெற்றிகரமான படங்களைத் தந்த இயக்குநர் மு.களஞ்சியம் நடிகர் கார்த்திக் தனது திரைப்படத்தில் நடித்தபோது கொடுத்த தொல்லைகள் குறித்துப் பேட்டி ஒன்றில்…
சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ ஒன்று வைரலாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அந்த வீடியோவில், இரண்டு குழந்தைகள் ஒரு பாம்புடன் ஒரு…
உத்தரபிரதேசத்தின் பிஜ்னோரில் பாம்பு கடித்த ஒருவர், உயிருள்ள பாம்பைப் பிடித்து, சீக்கிரம் அடையாளம் காண மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று, தனது…
குஜராத்தின் அர்வல்லி மாவட்டத்தில் உள்ள மொடசா நகரம் அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலையில் ஆம்புலன்ஸ் தீப்பிடித்து எரிந்ததில், புதிதாகப் பிறந்த குழந்தை,…