#image_title
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். எந்த ஒரு சினிமா பின்புறமும் இல்லாமல் தனது திறமையால் மட்டுமே முன்னுக்கு வந்திருப்பவர் சிவகார்த்திகேயன். சின்னத்திரை விஜய் டிவியில் மிமிக்ரி செய்பவராகவும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவராகவும் தனது கேரியரை தொடங்கினார் சிவகார்த்திகேயன்.
அதன் மூலம் அவருக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது. மெரினா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமான சிவகார்த்திகேயனின் ஆரம்பத்தில் காமெடி கதை அம்சம் கொண்ட திரைப்படங்களான கேடி பில்லா கில்லாடி ரங்கா வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற திரைப்படங்களில் நடித்தார். அடுத்ததாக கமர்சியல் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார் சிவகார்த்திகேயன். அதன்படி சீமராஜா, எங்க வீட்டு பிள்ளை, மாவீரன் போன்ற திரைப்படங்களில் நடித்தார். நடிப்பது மட்டுமில்லாமல் சில திரைப்படங்களை தயாரித்தும் இருக்கிறார் சிவகார்த்திகேயன்.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் திரைப்படம் அமரன். இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து உயர்நீத்த மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களது வாழ்க்கை வரலாறை படமாக உருவாக்கி இருக்கிறார்கள். இந்த திரைப்படம் இன்று தியேட்டரில் ரிலீஸ் ஆகி மக்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்த் வரதராஜனாகவே வாழ்ந்திருக்கிறார். ஒரு ராணுவ வீரர் எந்த மாதிரி எல்லாம் இருப்பாரோ உடலை எந்த அளவுக்கு மாற்ற வேண்டுமோ அந்த அளவுக்கு தனது உடல் எடையை குறைத்தும் கூட்டியும் பயங்கரமாக இந்த படத்திற்காக தனது உழைப்பை போட்டு இருக்கிறார் சிவகார்த்திகேயன் என்பது நமக்கு தெரிகிறது.
அமரன் திரைப்படத்தின் நாயகியான சாய் பல்லவியின் நடிப்பு காதல் அவரது Feelingசை வெளிப்படுத்திய விதம் எல்லாமே இந்த படத்திற்கு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. அவரது காட்சிகள் எல்லாமே பார்ப்பதற்கே மிகவும் நன்றாக இருந்தது. ஒரு ராணுவ வீரரின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை இந்த அமரன் திரைப்படம் எடுத்துக்காட்டுகிறது.
இறுதியில் சாய் பல்லவியின் மடியில் சிவகார்த்திகேயன் கண் மூடும் இறுதிக்காட்சி அனைத்து மக்களையும் கண்கலங்க வைத்திருக்கிறது. மொத்தத்தில் அமரன் திரைப்படம் இந்திய ராணுவத்தில் பணிபுரியவர்களுக்கும் போரில் வீர மரணம் அடைந்தவர்களுக்கும் சமர்ப்பணமாக அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தான் இந்த படம் இருக்கிறது. மக்கள் இந்த படத்தை ரசித்து பார்த்து நல்ல விமர்சனங்களை கூறி வருகின்றனர்.
கச்சா எண்ணெய் கொள்முதல் விவகாரத்தில் இந்தியாவுக்கு இனி சலுகைகள் வழங்கப்படாது என்று அமெரிக்கா அதிரடியாக அறிவித்துள்ளது. உக்ரைன் போர் மற்றும்…
தமிழ் திரையுலகில் 80 மற்றும் 90-களில் உச்ச நட்சத்திரமாகத் திகழ்ந்த 'மக்கள் நாயகன்' ராமராஜன், அதிமுகவின் தீவிர விசுவாசியாகவும் திருச்செந்தூர்…
இந்திய ரிசர்வ் வங்கி (RBI), 2026-ஆம் ஆண்டிற்கான இளநிலை பொறியாளர் (Junior Engineer - Civil/Electrical) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ…
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் மற்றும் போதைக் கலாச்சாரம் அதிகரித்துள்ளதாகத் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.…
பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தைபாவின் (LeT) இணை நிறுவனரும், ஹபீஸ் சயீதுக்கு அடுத்தபடியாக அந்த அமைப்பின் மிக முக்கியத் தலைவருமான அமீர்…
பெங்களூருவில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தனது வயதான தாயை, நான்காவது மாடியில் இருந்து கீழே தள்ளி கொலை செய்த மகனின் கொடூரமான…