Categories: சினிமா

தனுஷ் குடும்பத்திற்கு விஜயகாந்த் செய்த உதவி… இப்படி ஒரு செயலை செய்த கேப்டன்…

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் புகழ் பெற்ற நடிகராகவும் இருந்தவர் விஜயகாந்த். மதுரையில் பிறந்து வளர்ந்தவர் விஜயகாந்த். இவரது இயற்பெயர் விஜயராஜ் அழகர்சுவாமி என்பதாகும். சிறு வயதிலிருந்து சினிமாவில் ஆர்வம் கொண்டிருந்ததால் அவரால் சரியாக படிக்க இயலவில்லை. அதனால் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று சென்னைக்கு குடி பெயர்ந்தார் விஜயகாந்த்.

சென்னைக்கு வந்த பிறகும் இவரது உருவம் மற்றும் கருமை நிறத்தை வைத்து பல அவமானங்களை சந்தித்தார் விஜயகாந்த். யாரும் இவருக்கு வாய்ப்பு தரவில்லை. மிகுந்த போராட்டத்திற்கு பிறகு 1979 ஆம் ஆண்டு இனிக்கும் இளமை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான விஜயகாந்த் தனது கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

1980 களில் பல வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கிறார் விஜயகாந்த். வைதேகி காத்திருந்தாள், ஊமை விழிகள், சின்ன கவுண்டர், மனக்கணக்கு போன்ற பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானார் விஜயகாந்த். 1990க்கு பிறகு அதிரடி ஆக்சன் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார் விஜயகாந்த். காவல்துறை அதிகாரியாகவும் ராணுவ அதிகாரியாகவும் பல அதிரடி சமூக நீதி கருத்துக்கள் கொண்ட கதைகளில் நடித்ததால் இவரை மக்கள் அன்போடு கேப்டன் என்று அழைத்தனர். 2000களுக்கு பிறகு அரசியல் கட்சியும் ஒன்றை ஆரம்பித்து எதிர் கட்சியாக இருந்தார் விஜயகாந்த். ஒரு நல்ல மனிதர் மட்டுமல்ல எல்லோருக்கும் உதவும் மனப்பான்மை கொண்டவர் இளகிய மனது கொண்டவர் அதற்கு ஒரு சம்பவம் சான்றாக இருக்கிறது.

நடிகர் தனுஷ் அவர்களின் தந்தை இயக்குனர் கஸ்தூரிராஜா இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த திரைப்படம் வீரம் வெளஞ்ச மண்ணு. இந்த திரைப்படம் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கும்போதே கஸ்தூரிராஜா அவர்களின் மகள் கட்டவுட் மார்க்கிலிருந்து ஒரு மார்க்கு குறைந்து விட்டாராம் ஆனால் அவருக்கு டாக்டர் படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்திருக்கிறது. உடனே விஜயகாந்த தன்னால் முயன்ற முயற்சிகளை செய்து கஸ்தூரிராஜா அவர்களின் மகள் தனுஷ் அவர்களின் அக்காவிற்கு டாக்டர் படிப்பதற்கு சீட்டை வாங்கி கொடுத்திருக்கிறார் விஜயகாந்த். இன்று தனுஷ் அவர்களின் அக்கா அப்போலோ மருத்துவமனையில் முதன்மை டாக்டராக இருக்கிறார். இப்படி யாராக இருந்தாலும் முதல் ஆளாக சென்று உதவி செய்வார் விஜயகாந்த்.

admin

Recent Posts

மின்னல் வேகத்தில் சென்ற வாகனம்…! 13 வயது சிறுமி துடிதுடித்து பலி… கதறும் குடும்பத்தினர்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…

45 seconds ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்…! மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…

10 minutes ago

“பஞ்ச் டயலாக் பேசி காலத்தை ஓட்ட இது சினிமா அல்ல…” தீபாவளி பரிசு கொடுத்து வழியனுப்பி வைப்பதா…? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்…!!

தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…

40 minutes ago

“முதல்வரே…! உங்க கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள்… இல்லை என்றால்…” தவெக அரசை கடுமையாக எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்…!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…

53 minutes ago

உச்சகட்ட கொடூரம்…! தந்தையின் தலையை தரையில் மோதி கொன்ற மகன்… நடுரோட்டில் அரங்கேறிய பயங்கரம்… பகீர் பின்னணி…!!

ஈரோட்டில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் பெற்ற தந்தையின் தலையைப் பிடித்துத் தரையில் பலமாக மோதிக் கொன்ற மகனை போலீசார் கைது…

1 மணத்தியாலம் ago

அட என்னங்க இது…? கிராம மக்களை தரையில் அமர வைத்து லத்தியால் மிரட்டிய இன்ஸ்பெக்டர்… சமூக வலைதளங்களில் சர்ச்சையை கிளப்பிய விவகாரம்…!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கிராம மக்களைத் தரையில் அமர வைத்து, கையில் லத்தியுடன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தும்…

2 மணத்தியாலங்கள் ago