வடிவேலுவை இப்படி எல்லாம் ரேகிங் செய்துள்ளாரா கவுண்டமணி..? இயக்குனர் பகிர்ந்த ஷாக்கிங் தகவல்..

By vinoth

Updated on:

தமிழ் சினிமாவில் என் ராசாவின் மனதிலே படத்தில் தோன்றி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தார் வடிவேலு. இந்த படத்தில் இடம்பெற்ற போடா போடா புண்ணாக்கு என்ற பாடலின் சில வரிகளையும் பாடினார். இந்த படத்தில் கவுண்டமணி செந்தில் போன்ற இரு ஜாம்பவான்கள் இருந்த போதும் வடிவேலு தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் விதமாக நடித்திருந்தார்.

இதையடுத்து சிங்காரவேலன் படத்தில் கமல்ஹாசனோடு நடிக்கும் போது அவரின் உடல்மொழி பிடித்துப் போய் கமல்ஹாசன் தேவர் மகன் படத்தில் வாய்ப்பளித்தார். தேவர் மகன் படம் வடிவேலுவுக்கு ஒரு நல்ல பிரேக்காக அமைந்தாலும், இயக்குனர் வி சேகரின் இயக்கத்தில் அவர் அடுத்தடுத்து நடித்த ‘வரவு எட்டணா செலவு பத்தனா’, காலம் மாறி போச்சு, நான் பெற்ற மக்னே போன்ற படங்கள்தான் அவரை காமெடியில் உச்சம் தொட வைத்தன.

   

வடிவேலுவுக்கு தொடர்ந்து இயக்குனர் வீ சேகர் தன்னுடைய படங்களில் வாய்ப்பளித்தார். அதற்கு முன்னர் அவர் படங்களில் கவுண்டமணி செந்தில்தான் நகைச்சுவை வேடங்களில் நடித்து வந்தனர். இப்போது புதிதாக வடிவேலுவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவது அவர்களுக்கு பிடிக்கவில்லையாம். இதைக் கவுண்டமணியே இயக்குனர் வீ சேகரிடம் பகிர்ந்து கொண்டுள்ளாராம்.

ஆனாலும் வடிவேலுவின் நடிப்பைப் பார்த்து வியந்த வீ சேகர் இவர் பெரிய ஆளாக வருவார் என்று உணர்ந்து அவருக்கு தன்னுடைய படங்களில் நடிக்க வைத்தார். ஒரு படத்தின் ஷூட்டிங் இடைவேளையில் அனைவரும் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது வடிவேலு நடிகர்களோடு அமர்ந்து சாப்பிட்ட போது அவரை திட்டிய கவுண்டமணி “இங்க இருக்குறவங்க எல்லாம் எவ்ளோ பெரிய சீனியர் நடிகர்கள். அவர்களோடு நீ உக்காந்து சாப்புட்றியா… எழுந்து போடா” எனக் கூறிவிட்டாராம்.

இதைப் பகிர்ந்துள்ள வீ சேகர் கல்லூரியில் எல்லாம் சீனியர்கள் ஜூனியர்களை எல்லாம் ராகிங் செய்வது போல வடிவேலுவை கவுண்டமணி, செந்தில் எல்லாம் ராகிங் செய்தனர் எனக் கூறியுள்ளார்.