லோகேஷ் கனகராஜை டார்ச்சர் செய்தேன் ; இனிமேல் ஆல்பம் குறித்து முதல்முறையாக ரகசியம் பகிர்ந்த ஸ்ருதிஹாசன்

By Deepika

Published on:

மாநகரம், கைதி, மாஸ்டர் என தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றி கொடுத்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். தான் கமலின் தீவிர ரசிகர் என பல மேடைகளில் கூறி வந்த லோகேஷுக்கு கமல் படத்தை இயக்கம் அதிர்ஷ்டமும் தேடி வந்தது. யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு விறுவிறுப்பான ஆக்சன் கதையாக கமலை வைத்து விக்ரம் படத்தை இயக்கினார் லோகேஷ் கனகராஜ்.

Kamal gift to Lokesh kanagaaj

பேன் பாய் சம்பவம் என்றால் இதுதான் என நிரூபித்தார் லோகேஷ். மற்ற நடிகர்களுக்கு ஹிட் கொடுத்த இயக்குனர், தன் ஆண்டவருக்கு கொடுக்க மாட்டாரா என ரசிகர்கள் பேசினர். யாரும் எதிர்பார்க்காத வசூலை அள்ளி குவித்தது விக்ரம் திரைப்படம். கமலுக்கே லோகேஷ் பேவரைட்டாக மாறினார். விலையுர்ந்த காரை பரிசளித்த கமல் மீண்டும் லோகேஷுடன் பணியாற்ற வேண்டும் என்ற விருப்பத்தையும் கூறினார்.

   
Lokesh Kanagaraj and shruti haasan in inemel song

இந்தநிலையில் கமலின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் தயாரிப்பில் ஸ்ருதிஹாசன் பாடிய ஆல்பம் பாடலில் ஸ்ருதிஹாசனும் லோகேஷ் கனகராஜும் நடித்துள்ளனர். இனிமேல் என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப்பாடல் தான் இணையத்தில் இப்போது ட்ரெண்டிங்கில் வைரலாகி வருகிறது. மிக ரொமான்டிக்காக எடுக்கப்பட்டுள்ள இந்தப்பாடலில் ஸ்ருதியின் கணவராக நடித்துள்ளார் லோகேஷ்.

Shruti haasan about working with lokesh kanagaraj

சமீபத்திய பேட்டியில், எப்படி லோகேஷை சம்மதிக்க வைத்தீர்கள் என ஸ்ருதியிடம் கேட்டபோது சில விஷயங்களை அவர் பகிர்ந்துகொண்டார். லோகேஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். அதனால் அவரை அணுகி, நீங்கள் நடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டேன். லோகேஷ் யோசித்தார், தொடர்ந்து மெசேஜ் மேல் மெசேஜ் செய்து அவரை டார்ட்ச்சர் செய்து விட்டேன், லோகேஷ் பாவம் என கூறியுள்ளார்.

Lokesh kanagaraj about shruti haasan

இதற்கு அடுத்து பேசிய லோகேஷ், சுருதி நல்ல மனிதர், நான் கம்போர்ட் ஆக இருக்க வேண்டும் என ரொம்ப மெனெக்கெட்டார், ராஜ்கமல் இருந்து என்னை அணுகினார் என்னால் நோ சொல்ல முடியாது அதனால் நானும் நடித்தேன் என கூறினார். பொதுவாக லோகேஷ் படங்களில் காதலே இருக்காது, அப்படி யாரவது காதலித்தால் அவர்களின் கதையை முடித்துவிடுவார். அப்படியிருக்க இவர் மட்டும் ரொமான்ஸ் செய்வாரா என நெட்டிசன்கள் இவரை கலாய்த்து வருகின்றனர்.

author avatar
Deepika