விமான நிலையத்தில் கொடூரம்.! “பைக்குள் ஏதோ சத்தம் கேட்குது” கொரியப் பெண்ணைக் கழிப்பறைக்கு அழைத்துச் சென்று… சிசிடிவியில் அம்பலமான ஊழியரின் வக்கிர புத்தி…!!

Spread the love

பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் கொரிய நாட்டைச் சேர்ந்த பெண் பயணி ஒருவருக்கு நேர்ந்த இந்த பாலியல் வன்கொடுமைச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு விமான நிலையத்தில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றி வந்த அஃபான் அகமது, டிக்கெட் பரிசோதனையின் போது ஒரு கொரியப் பெண்ணை வழிமறித்துள்ளார். அந்தப் பெண்ணின் பையிலிருந்து ‘பீப்’ ஒலி வருவதாகக் கூறி, சோதனையிட வேண்டும் என அவரைத் தனியே அழைத்துச் சென்றுள்ளார். பாதுகாப்பு சோதனையிட வேண்டிய இடத்திற்குப் பதிலாக, திட்டமிட்டு அந்தப் பெண்ணை ஆண்களுக்கான கழிப்பறைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

கழிப்பறைக்குள் வைத்து அந்தப் பெண்ணை சோதனையிடுவதாகக் கூறி, அஃபான் அகமது அவரிடம் பாலியல் ரீதியாக மிகவும் தவறான முறையில் அத்துமீறி நடந்துகொண்டார். இந்த வக்கிரச் செயலால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில், போலீசார் உடனடியாக விசாரணையைத் தொடங்கினர். விமான நிலைய சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்தபோது, அஃபான் அகமது அந்தப் பெண்ணைத் தவறான இடத்திற்கு அழைத்துச் சென்றது உறுதி செய்யப்பட்டது. இந்த வெட்கக்கேடான செயலில் ஈடுபட்ட அஃபானை போலீசார் கைது செய்துள்ளனர். சர்வதேசப் பயணிகள் வரும் ஒரு முக்கியமான இடத்தில், ஊழியரே இத்தகைய குற்றத்தில் ஈடுபட்டது பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Soundarya

Recent Posts

“அவர் அங்கே… இவர் இங்கே”… 52 வயதில் 2வது திருமணம் செய்த மாஜி மனைவியால் உச்சகட்ட பரபரப்பு….. லண்டனில் நடந்த ரகசிய திருமணம்….!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், முன்னாள் பிரதமருமான இம்ரான் கான் தற்போது ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு அந்நாட்டுச் சிறையில்…

1 minute ago

“அனாதை ஆசிரமத்துக்கு சொத்து”…. முதியவர் சொன்ன ஒற்றை வார்த்தை… அதிகாலையில் நடந்த கொடூரம்…. தாய், மகன் சேர்ந்து செய்த மன்னிக்க முடியாத காரியம்…!

சொத்துத் தகராறிலும் வாடகை பணப் பிரச்சினையிலும் ஓய்வுபெற்ற அரசுப் பேருந்து ஓட்டுநர் சொந்தக் குடும்பத்தாலேயே கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம்…

9 minutes ago

BREAKING: எ.வ.வேலு விலகினார்…. சற்றுமுன் ஸ்டாலினுக்கு பேரதிர்ச்சி… கொதிக்கும் திமுக உடன்பிறப்புகள்….!

சமீபத்திய அரசியல் நகர்வுகளின் பின்னணியில், தமிழக சட்டப்பேரவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் விமர்சனங்களுக்குப் பதில் அளிக்காமல் எ.வ.வேலு விலகி நிற்பது…

15 minutes ago

அன்பில் மகேஷ் போட்ட இரகசிய போன் கால்… வெளியே வந்து KN நேரு கொடுத்த பதிலடி…. தமிழக அரசியலில் திடீர் பரப்பரப்பு….!

தனியார் பள்ளிகளுக்கு அனுமதி அளித்தல், புதுப்பித்தல் மற்றும் ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான விவகாரங்களில் பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாக…

23 minutes ago

வீட்டில் சண்டை போட்டு காரை ஓட்டிய சிறுவன்…! சகோதரர்கள் மீது மோதி…. ரத்த வெள்ளத்தில் போராடிய உயிர்கள்…. பதைப்பதைக்கும் வீடியோ வைரல்…!!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் 17 வயதே ஆன மைனர் சிறுவன் ஒருவன் காரை அதிவேகமாகவும் அலட்சியமாகவும் ஓட்டி வந்து, சாலையில்…

29 minutes ago

“மருத்துவக் கனவோடு ரஷ்யா சென்ற இளைஞருக்கு நேர்ந்த கொடுமை”…. கதறித் துடிக்கும் பெற்றோர்… நெஞ்சை உலுக்கும் சோகம்….!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சேதுராஜ் - லலிதா தம்பதியரின் 28…

32 minutes ago