கொல்கத்தாவில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் பேட்டியில், 20 ஓவர் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகிய இருவருக்கும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடக்கும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை கடைசி போட்டியாக இருக்கக்கூடும், என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர், அது பற்றி ஒன்றும் தெரியாது. ஆனால் யார் சிறப்பாக விளையாடுகிறார்களோ அவர்களே விளையாடுவார்கள். இருவரும் நன்றாக ஆடி, ரன் குவிக்கும் பட்சத்தில், அவர்கள் தொடர்ந்து விளையாடு வேண்டும். விராட் கோலியின் ஒருநாள் போட்டி சாதனை தனித்துவமானது. ரோகித் ஷர்மாவும் வெள்ளை நிற பந்து கிரிக்கெட்டில் நிறைய சாதித்தவர், என்றார்.
மேலும் ஐ.பி.எல் முடிந்த உடனே, இந்திய அணியினர் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 5 டெஸ்ட் விளையாடிய நிலையில், தற்போது ஓய்வில் உள்ளனர். செப்டம்பர் 9 ஆம் தேதி தொடங்க இருக்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் விளையாட உள்ளனர். இந்தியா மிகவும் பலமிக்க அணி.
சிவப்பு நிற பந்து கிரிக்கெட்டில் வலுவாக உள்ள இந்திய அணி, வெள்ளை நிற பந்து போட்டியில் அதைவிட மிக வலுவாக திகழும். எனவே, ஆசிய கோப்பையை வெல்வதற்கு இந்திய அணிக்கு வாய்ப்பு அதிகம் என்பது எனது கருத்து, என்றார்.
பெங்கால் கிரிக்கெட் சங்க நிர்வாகத்தில் மீண்டும் அடியெடுத்து வைப்பது குறித்து கேள்வி எழுப்பிய பொழுது, உறுப்பினர்கள் இஷ்டப்பட்டால் பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவர் பதவிக்கு வேட்புமன தாக்கல் செய்வேன், என்றார்.
