ஓடிக்கொண்டிருக்கும்போதே திடீரென தீப்பிடித்து எரிந்த பேருந்து.. கேரளாவில் பரபரப்பு சம்பவம்..!

By Divyamayakannan on ஆவணி 11, 2025

Spread the love

கேரளா மாநிலத்தில் உள்ள பாலக்காட்டில் இருந்து கோழிக்கோடு சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து திடீரென்று தீப்பிடித்து எரிந்துள்ளது. காலை 8:30 மணி அளவில் பயணிகளுடன் மலப்புறம் மாவட்டம் கொண்டொட்டி அருகே விமான நிலைய சந்திப்பில் துறக்கல் என்ற பகுதியில் சென்றுகொண்டிருந்த போது பஸ்ஸின் முன்புறம் திடீரென்று கரும்புகை எழுந்துள்ளது. அததை பார்த்து சுதாரித்துக் கொண்ட டிரைவர் பஸ்ஸை நிறுத்தியுள்ளார் கண்டக்டரும் வெளியே வந்து பஸ்சை சோதித்து விட்டு சூதனமாக பஸ்ஸில் உள்ள அனைத்து பயணிகளையும் டிரைவர், கண்டக்டர் உடனே வெளியேற்றி உள்ளனர்.

பஸ்ஸில் தீ மளமளவென படர்ந்து பஸ் முழுவதும் எரிந்து எலும்புகூடாக மாறிவிட்டது. உடனே போலீசாருக்கும் தீயணைப்பாளருக்கும் தகவல் தெரிவித்தனர். சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை முழுவதுமாக அணைத்து உள்ளனர். போலீசார் விசாரணையில் பஸ்ஸில் மின்கசிவு காரணமாகவே தீப்பிடித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பஸ்ஸில் பயணித்த அனைத்து பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளனர். பின்பு அவர்களை வேறு ஒரு பஸ்ஸில் வரவர் ஊருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.