திருப்பூர் மாவட்டத்தில் ரூ.950 கோடியில் முடிவுற்ற 61 திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து தொடர்ந்து பேசிய அவர், அதிமுக ஆட்சியில் திருப்பூர் மாவட்டம் புறக்கணிக்கப்பட்டதாக குற்றம் சாட்டினார். தேர்தல் ஆணையத்தை தனது மோசடி இயந்திரமாக பாஜக மாற்றிவிட்டது. வாக்கு மோசடியை ராகுல் காந்தி அம்பலப்படுத்தி உள்ளார்.
தேர்தல் ஆணையத்தை தன்னுடைய மோசடி இயந்திரமாக பாஜக மாற்றிவிட்டது. மக்கள் தீர்ப்பை திருடுவதற்கான சதி அம்பலமாக உள்ளது. மக்களாட்சியை பாஜக திருடுவதை வேடிக்கை பார்க்க முடியாது. வாக்குத்திருட்டு மோசடிக்கு எதிரான ராகுல் காந்தியின் போராட்டத்திற்கு திமுக தோளோடு தோள் நிற்கும் என்று அறிவித்துள்ளார் .
