இன்றைய காலகட்டத்தில் மக்கள் முதலீடு மட்டும் சேமிப்புகளை அதிக அளவில் செய்கிறார்கள். SIP Mutual Fund, வங்கி தபால் அலுவலகம் போன்று PPF சேமிப்பு திட்டமும் சந்தையின் பெரும் அபாயங்களிலிருந்து விலக்கி பாதுகாப்பான முதலீட்டை விரும்புபவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். அது மட்டுமில்லாமல் நிலையான வருமானத்தையும் இது தரும். இதில் ஆண்டுக்கு ஒரு லட்சம் நீங்கள் முதலீடு செய்யும்போது அதன் முதிர்வு தொகை என்ன வட்டியுடன் செய்து எவ்வளவு கிடைக்கும் என்பதை பற்றி இனி காண்போம்.
உங்களது பணம் பாதுகாப்பாக சேமிப்பாக இருக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் PPF இல் எந்த ஒரு சந்தேகமும் இல்லாமல் முதலீடு செய்யலாம். மத்திய அரசால் நடத்தப்படும் இந்த PPF அரசாங்க முதலீட்டு திட்டம் ஆகும். இது அரசு நடத்தப்படுவது என்பதால் உங்கள் பணத்திற்கு முற்றிலும் பாதுகாப்பு இருக்கும். இந்த PPF க்கு ஆண்டுக்கு 7.1% வட்டி நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. நாட்டில் உள்ள எந்த வங்கிகளிளும் தபால் நிலையத்திலும் இந்த PPF திட்டத்தை நீங்கள் தொடங்கலாம்.
இந்த PPF திட்டத்தில் ஒரு வருடத்திற்கு குறைந்தது 500 ரூபாய் முதல் முதலீடு செய்யலாம். ஒரு வருடத்திற்கு அதிகபட்சமாக ரூ 1.5 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். நீங்கள் ஆண்டுதோறும் ஒரு லட்சம் என டெபாசிட் செய்து 15 ஆண்டுகள் அதை திட்டத்தில் நீங்கள் சேமித்தால் முதிர்வு தொகை எவ்வளவு கிடைக்கும் தெரியுமா?
PPF திட்டத்தில் 15 ஆண்டுகளுக்கு 15 லட்சம் நீங்கள் முதலீடு செய்யும்போது உங்களது வட்டி மட்டுமே ரூ 12,12,139 ஆக இருக்கும். அதுடன் சேர்த்து உங்களது முதிர்வு தொகை ரூபாய் 27,12, 139 ஆக இருக்கும். உங்களது பிள்ளைகளின் திருமணம் அல்லது படிப்பு செலவுக்கு நீங்கள் சேர்த்து வைக்க வேண்டும் என்று நினைத்தால் PPF பெரிதாக உதவும்.