தமிழ்நாட்டில் உத்தரபிரதேசத்தில் மகா கும்பமேளா திருவிழா வெகு விமர்சையாக நடந்து வருகிறது. 144 வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் இந்த மகா கும்பமேளா திருவிழா இந்துக்களுக்கு மிக முக்கியமான ஒரு பண்டிகையாக பார்க்கப்படுகிறது. தினமும் கோடி கணக்கான மக்கள் திரிவேணி சங்கமத்தில் கங்கையில் புனித நீராடுகின்றனர்.

கங்கையில் இந்த நேரத்தில் புனித நீராடும்போது ஒவ்வொருத்தரின் பாவங்கள் நீங்கி புண்ணியங்கள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. ஒட்டுமொத்த கும்பமேளா நிகழ்ச்சி நிறைவடைவதற்குள் கிட்டத்தட்ட 40 கோடி மக்கள் அங்கு கூடுவார்கள் என்று நம்பப்படுகிறது. அதில் தினமும் சராசரியாக 8 கோடி மக்கள் திரிவேனி சங்கமத்தில் நீராடுவதற்காக கூடுகின்றனர். இத்தனை கோடி மக்கள் ஒரு இடத்தில் கூடும்போது கண்டிப்பாக ஏற்படக்கூடிய ஒரு பிரச்சனை என்னவென்றால் சிறுவர்களோ சிறுமிகளோ பெரியவர்களோ பலர் தொலைந்து போய் விடுவார்கள்.
ஏனென்றால் அங்கு அவ்வளவு கூட்டல் நெரிசல் இருக்கும். அப்படி ஒருவரை ஒருவர் தொலைந்து போகாமல் பாதுகாப்பாக இருப்பதற்கு ஒரே வழி இருவர் ஒட்டிக்கொண்டுதான் இருக்க வேண்டும். இந்த ஒரு பிரச்சினையை மையமாக வைத்து Fevicol நிறுவனம் புதுவிதமான மார்க்கெட்டிங் ஸ்டேடர்ஜியை உருவாக்கி அதை வெற்றிகரமாகவும் நடத்திருக்கிறது.

அது என்னவென்றால் Fevicol நிறுவனம் இரண்டு மூன்று நான்கு பேர் சேர்த்து அணியக்கூடிய ஒட்டி தைக்கப்பட்ட டீசர்ட்களை தங்களது பெயர் போட்டு அங்கு விற்பனை செய்கிறது. இதன் மூலம் ஒருவரை ஒருவர் சேர்ந்து ஒரே டி-ஷர்ட் அணிந்து செல்வதால் அவர்கள் எந்த நேரத்திலும் பிரிந்து சென்று தொலைந்து போக மாட்டார்கள். இது ஒரு அற்புதமான ஸ்டேட்டர்ஜியாக யார் டீசர்ட் வாங்குகிறார்களோ அவர்களே அந்த கம்பெனியின் மார்க்கெட்டிங்கில் இணைந்து செயல்படுவது போல் இருக்கிறது. இப்படி ஒரு புதுவித முயற்சியை செய்து Fevicol தங்களது வியாபாரத்தை பெருக்கி இருக்கிறார்கள்.
