இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சென்றுள்ள நிலையில் ஆண்டர்சன் தெண்டுல்கர் கோப்பைக்கான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகின்றது. இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நடந்து கொண்டிருக்கிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 113 ஓவரில் 471 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து களம் இறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 465 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் களம் இறங்கிய நிலையில் ஜெய்ஸ்வால் 4 ரன்னில் அவுட் ஆனார். சாய் சுதர்ஷன் 30 ரன்னில் வெளியேறினார். மூன்றாம் நாள் முடிவில் இந்தியா இரண்டு விக்கெட் இழப்புக்கு 90 ரன்கள் எடுத்துள்ளது. இப்படியான நிலையில் நேற்றைய டெஸ்ட் போட்டியில் பேட்டி நடந்தபோது சாய் துர்சனிடம் கே எல் ராகுல் தமிழில் பேசியுள்ளார். நல்ல பவுன்ஸ் இருக்கு மச்சி என்று கே எல் ராகுல் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
🔥🔥 #KLRahul #SaiSudharsan #ENGvIND #bcci #TestCricket pic.twitter.com/M7hdfyy0Vc
— mohankumar (@mohanramuk19) June 23, 2025
