முருகன் மாநாட்டில் அண்ணாவை விமர்சிக்கும் வீடியோவை தவிர்த்திருக்கலாம்… EX அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வருத்தம்..!!

By Soundarya on ஆனி 23, 2025

Spread the love

மதுரையில் இந்து முன்னணி ஏற்பாடு செய்த முருகன் மாநாடு இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, இந்து முன்னணி தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியன், ஆர் எஸ் எஸ் மூத்த உறுப்பினர்கள், ஆன்மீகவாதிகள் கலந்து கொண்டார்கள். இந்த நிலையில் இந்த முருகன் மாநாட்டில் பெரியார், அண்ணாவை விமர்சித்து வெளியிடப்பட்ட வீடியோவை மேடையில் அமர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கண்டு ரசித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் அண்ணாவை விமர்சிக்கும் வீடியோ வருத்தம் அளிக்கிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,  மதுரையில் நடந்த முருகன் மாநாட்டில் அண்ணாவை விமர்சிக்கும் வகையில் வீடியோ ஒளிபரப்பியது வருத்தம் அளிக்கிறது. மறைந்த முன்னாள் தலைவர்களை விமர்சிக்கும் வகையிலான வீடியோவை தவிர்த்து இருக்கலாம். முருக பக்தர்கள் மாநாட்டில் நடந்த ஒரு நிகழ்வை வைத்து அதன் நல்ல கருத்துகளை புறக்கணிக்க முடியாது.” என்று கூறியுள்ளார்.