‘மந்திரி குமாரி’ முதல் ‘உன்னை நினைத்து’ வரை 50 ஆண்டு திரைப்பயணம்… அப்பா வேடம்னா இவர்தான் என பெயர் வாங்கிய நடிகர் கே கே சௌந்தர்!

By vinoth

Updated on:

தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடத்தில் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக பல படங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர் கே கே சௌந்தர். இவர் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவர் சிறு வயதிலேயே நாடக மேடைகளில் பல நாடகங்களில் நடித்து அதன் மூலம் திரையுலகில் கால்பதித்தார்.

அவரது நடிப்பில் உருவான மிகச்சிறந்த படங்களில் எம்ஜிஆர், சிவாஜி முதல் கமல், ரஜினி தொடங்கி இன்றைய நடிகரான சூர்யா வரை பலருடன் இணைந்து நடித்துள்ளார்.திரையுலகில் அவரின் முதல் படமாக அமைந்தது  எம்ஜிஆர் நடித்த மந்திரிகுமாரி திரைப்படம்.  அதைத் தொடர்ந்து 1950 களில் சில படங்களில் நடித்தாலும் சொல்லிக்கொள்ளும் படியான வேடம் எதுவும் அவருக்கு அமையவில்லை.

   

இந்த காலகட்டத்தில் குறிப்பிடத்தகுந்த படங்களாக வல்லவன் ஒருவன், அலிபாபாவும் 40 திருடர்களும், பாசம், கர்ணன், அன்னை இல்லம், தேடி வந்த மாப்பிள்ளை, என் அண்ணன், புன்னகை, நேற்று இன்று நாளை, வாழ்ந்து காட்டுகிறேன், ஒரு கை ஓசை, போன்ற பல படைப்புகளை கூறலாம்.

60கள் முதல் 80 களில் அவர் ஏராளமான படங்களில் நடித்தாலும்  80களில்தான் அவருக்கு பல முக்கியமான வேடங்கள் அமைந்தன. குறிப்பாக இயக்குனர் பாக்யராஜின் பல படங்களில் அவருக்கு பல நல்ல வேடங்களை அளித்தார். பாக்யராஜ் நடித்து இயக்கிய ஒருகை ஓசை என்ற திரைப்படத்தில் அவரின் அப்பாவாக நடித்திருப்பார்.

அதே போல பாக்யராஜின் முந்தான முடிச்சு திரைப்படத்தில் ஊர்வசியின் அப்பாவாக ஊர் பெரிய மனிதராக நடித்திருந்தார். மற்றொரு பாக்யராஜின் படமான சின்னவீடு படத்திலும் நகைச்சுவை கலந்த அப்பா வேடத்தில் நடித்திருப்பார்.80 களைக் கடந்து 90 களிலும் அவருக்கு இளம் ஹீரோக்களுடன் இணைந்து நடிக்க வாய்ப்புகள் வந்தன.

2000 ஆண்டு சூர்யா நடித்த உன்னை நினைத்து என்ற திரைப்படத்தில் சூர்யாவின் தந்தையாக நடித்திருந்தார். அதுவே  கேகே சௌந்தரின் கடைசி படமாக அமைந்தது. அதன் பின்னர் சினிமாவில் இருந்து விலகியிருந்த சௌந்தர் 2003 ஆம் ஆண்டு தனது 78 வயதில் காலமானார்.

author avatar