ராஜ்கமல் ஃபிலிம் இல் நடிக்கும் சிவகார்த்திகேயன் Sk 21 படத்தில் அப்டேட் வெளியாகி உள்ளது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி அவர்கள் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடிப்பில் G.V பிரகாஷ் இசை அமைத்து ராஜ் கமல் ஃபிலிம் தயாரிப்பில் உருவாகிக் கொண்டிருக்கிறது. இப்படம் மறைந்த மேஜர் முகுந்தன் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாறு தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது, அதனால் சிவகார்த்திகேயன் அவர்கள் வெறித்தனமாக ஒர்க்அவுட் செய்து வருகிறார்கள், தற்போது அவர் ஒரு கூத்து செய்யும் புகைப்படம் தம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி கொண்டு இருக்கிறது, அதனை அடுத்து ராஜ்கமல் ஃபிலிம் youtube சேனலில் எஸ்கே 21 படத்திற்கான டைட்டில் ரிவில் டேட்டை அஃபீஷியலாக வெளியிட்டுள்ளார்கள்.
நீண்ட நாட்களுக்கு முன்னால் A.R முருகதாஸும் சிவகார்த்திகேயனும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி கொண்டிருந்தது. அதற்குக் காரணம் நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் Sk 23 உருவாக உள்ளதாக தகவல் வெளியானது. இப்படத்தில் இணைந்த மாபெரும் நடிகர் ஆன மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் மற்றும் பாலிவுட் நடிகர் வித்யுத் ஜம்வால் ஆகியோர் இப்படத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக சமீபத்திய சலசலப்பு.இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்க மோகன்லால் மற்றும் வித்யுத் ஜம்வால் இருவரிடமும் தயாரிப்பாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிவகார்த்திகேயன் தனது ராஜ்குமார் பெரியசாமி படத்தை முடித்த பிறகு இந்த ஆண்டு இறுதியில் இந்த திட்டம் தொடங்கும். இந்த திட்டம் சிவகார்த்திகேயனின் மிகப்பெரிய படங்களில் ஒன்றாக இருக்கும் என்பதால், படத்தின் இசையமைப்பாளராக அனிருத் முடிவாகிவிட்டதாக தகவல்களும் இருப்பதால், படக்குழு முன் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது.இப்படம் அவுட் அண்ட் அவுட் ஆக்ஷன் என்டர்டெய்னர் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
பாலிவுட் நடிகை மிருணால் தாக்கூர் கதாநாயகியாக நடிக்கிறார். மெர்னால் தாகூர் கதாநாயகியாக இப்படத்தில் இணைவதை கண்ட ரசிகர்கள் மாபெரும் உற்சாகத்தில் இருக்கிறார்கள். சிவகார்த்திகேயன் தற்போது இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியுடன் ‘SK22’ படத்தில் பிஸியாக இருக்கிறார், மேலும் ‘SK22’ படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு இந்த ஆண்டு இறுதியில் AR முருகதாஸின் ‘SK23’ படப்பிடிப்பை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.