நெகட்டிவ் ரோலில் பின்னி பெடலெடுத்த விஜயகாந்த்… சொக்கத்தங்கம் வில்லனாக நடித்த படங்களின் லிஸ்ட்..

By vinoth

Updated on:

தமிழ் சினிமாவில் 80 களிலும், 90 களிலும் மிகப்பெரிய ஆக்‌ஷன் ஹீரோவாக வலம் வந்தவர் விஜயகாந்த். அவர் நடித்த ஊமை விழிகள், கேப்டன் பிரபாகரன், புலன் விசாரணை, வானத்தைப் போல, சின்னக்கவுண்டர் மற்றும் ரமணா உள்ளிட்ட படங்கள் எல்லாம் பிளாக்பஸ்டர் ஹிட்களாக அமைந்தன.

இனிக்கும் இளமை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான விஜயகாந்த் தொடக்கத்தில் வில்லன் வேடத்தில் சில படங்களில் நடித்தார்.  தொடக்கத்தில் அவருக்கு கதாநாயகன் வேடம் எளிதாகக் கிடைக்கவில்லை. கிடைத்த ஒன்றிரண்டு படங்களும் சொல்லிக்கொள்ளும் படி ஓடவில்லை. அதன் பின்னரே சட்டம் என் கையில் படம் வெளியாகி அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது.80 களில் வில்லனாகவும், ஆண்ட்டி ஹீரோவாகவும் விஜயகாந்த் நடித்துள்ள சில படங்களைப் பற்றி இதில் பார்ப்போம்.

   

இனிக்கும் இளமை

இதுதான் விஜயகாந்த் முதல்ல நடிப்பில் வெளியான முதல் படம். 1979ல் வெளியானது. எம்.ஏ.காஜா இயக்கிய இந்தப் படத்தில் அருண் என்ற கதாபாத்திரத்தில் விஜயகாந்த் வில்லனாக மிரட்டினார். சுதாகர் கதாநாயகனாக நடிக்க ராதிகா, வி.கே.ராமசாமி, காந்திமதி உள்பட பலர் நடித்துள்ளனர். சங்கர் கணேஷ் இசை அமைத்தார். இந்த படம் விஜயகாந்துக்கு ஒரு சிறந்த அறிமுக திரைப்படமாக அமைந்தது.

சாமந்திப்பூ

விஜயகாந்த் வில்லனாக நடித்த 2வது படம் சாமந்திப்பூ. 1980 ஆம் ஆண்டு வெளியானது. சிவகுமார் இந்த படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். ஷோபா கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படத்தில் விஜயகாந்த் பணக்கார வீட்டுப்பிள்ளையாக பெண்கள் மீது பொருந்தா காமம் கொண்டவராக நடித்திருந்தார்.

நூலறுந்த பட்டம்

கமலின் சிகப்பு ரோஜாக்கள் மாதிரி கேப்டன் ஆண்ட்டி ஹீரோவாக நடித்த படம். இந்த படம் 1981ல் வெளியானது. விஜயகாந்த் வாழ்க்கையில எந்த ஒரு பிடிப்பும் இல்லாமல் இருக்கிறார். அவர் ஹீரோயினையே ஏமாற்றிக் கெடுத்து விடும் கேரக்டர் தான் விஜயகாந்த். க்ளைமேக்ஸில் திருந்துவது போல அமைக்கப்பட்டிருக்கும்.

ஓம் சக்தி படமும் விஜயகாந்தை ஒரு ஆண்ட்டி ஹீரோவாக நடித்த திரைப்படம். 1982ல் வெளியானது. இதிலும் ஒரு பெண் பித்து பிடித்த கதாபாத்திரத்தில் விஜயகாந்த் நடித்திருந்தார். அடுத்து தீர்ப்பு என் கையில் 84ல் வெளியானது. இந்தப் படத்தில் நிறைய கொலைகள், திருட்டு என விஜயகாந்த் செய்வார். கடைசியில் ஜெயிலுக்கு வந்து திருந்தும் நேரத்தில் இறந்து விடுகிறார். இதுலயும் விஜயகாந்த் தான் ஹீரோ.

ராமன் ஸ்ரீராமன் என்ற படம் 85ல் வெளியானது. இதுல விஜயகாந்த் இரட்டை வேடம். ஆள்மாறாட்டம், பெண்களை ஏமாற்றுதல்னு வில்லனாக அட்டகாசம் செய்திருந்தார் விஜயகாந்த். ஒருவர் நல்லவர். ஒருவர் கெட்டவர். கிளைமேக்ஸில் வில்லனும் திருந்திவிடுவார். இப்படி சில படங்களில் ஆண்ட்டி ஹீரோவாக நடித்த அவர் அதன் பிறகு முழுக்க முழுக்க எந்த கெட்ட பழக்கமும் இல்லாத நல்லவன் கதாபாத்திரத்தில் மட்டுமே நடிக்க தொடங்கினார்.

author avatar