சிவாஜி கணேசனை தன்னுடைய படத்தில் நடிக்க வைக்க ஆசைப்பட்ட ஷங்கர்… ஏன் நடக்கவில்லை தெரியுமா?

By vinoth

Updated on:

தமிழ் சினிமாவில் நடிப்புக்கு இலக்கணம் வகுத்த நடிகர்களில் ஒருவர் சிவாஜி கணேசன். பி யு சின்னப்பா, எம் ஆர் ராதா, பாலையா என சிறந்த நடிகர்களின் வரிசையில் பராசக்தி மூலமாக அதிர்வலையை உருவாக்கியவர் சிவாஜி கணேசன். அதன் பிறகு 25 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் நடிகர் திலகமாக வலம் வந்தார். ஆனால் அவருக்கு ஒரு முறை கூட நடிப்புக்கான தேசிய விருது வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

1980 களில் ரஜினி, கமல் போன்ற இளம் நடிகர்களின் வரவாலும், சினிமாவின் முகம் மாறியதாலும், சிவாஜி கணேசன் கதாநாயக வேடங்களில் நடிப்பதில் இருந்து ஒதுங்கி குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். இதற்கு பிறகு அவருக்கு முதல் மரியாதை, தேவர் மகன் மற்றும் படையப்பா போன்ற படங்களில் சிறப்பான கதாபாத்திரங்கள் அமைந்தன.

   

இதனால் பல இளம் இயக்குனர்கள் சிவாஜிக்காக அருமையான கதாபாத்திரங்களை எழுதி அவரை நடிக்க வைத்தனர். அந்த வகையில் இயக்குனர் ஷங்கரும் தன்னுடைய படத்தில் சிவாஜி கணேசனை ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க ஆசைப்பட்டுள்ளார்.

ஜெண்டில்மேன் என்ற வெற்றிப் படத்தைக் கொடுத்த பின்னர் தன்னுடைய இரண்டாவது படமாக காதலன் திரைப்படத்தை இயக்கினார். அந்த படத்தில் பிரபுதேவா கதாநாயகனாக நடித்தார். அந்த படத்தில் பிரபுதேவாவின் தந்தை கதாபாத்திரத்தில் எஸ் பி பாலசுப்ரமணியம் நடித்திருப்பார். அருமையான கதாபாத்திரமாக அமைந்த அந்த பாத்திரத்தில் முதலில் சிவாஜியைதான் நடிக்க வைக்க வேண்டுமென ஷங்கர் ஆசைப்பட்டுள்ளார்.

ஆனால் அந்த கதாபாத்திரத்தில் சிவாஜி கணேசன் நடித்தால் எப்படி இருக்கும் என யோசித்த போது “சிங்கத்துக்கு நாம் சாண்ட்விச் கொடுத்தது போல ஆகிவிடும்” என ஜர்க் ஆகியுள்ளார். அதன் பின்னர்தான் எஸ் பி பி யை நடிக்க வைத்துள்ளார். அதன் பிறகு தன்னுடைய எந்த படத்திலும் சிவாஜியை அவரால் நடிக்கவைக்க முடியவில்லை என்பதுதான் சோகம்.

author avatar