பெங்களூரு மாரத்தஹள்ளியில் தங்கி தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வந்த மகேந்திரா மற்றும் தருண் ஆகிய இரு என்ஜினீயர்கள் மீது பாலியல் வன்கொடுமை புகார் எழுந்தது. அவர்களது அறையில் தங்கியிருந்த நண்பர் மஞ்சு சொந்த ஊருக்குச் சென்றிருந்த வேளையில், அவரது மற்றொரு நண்பரான ராஜ்குமார் தனது காதலியுடன் அங்கு வந்துள்ளார். அப்போது ராஜ்குமாரைத் தனி அறையில் பூட்டிவிட்டு, அவரது காதலியை மகேந்திராவும் தருணும் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த பாதிக்கப்பட்ட பெண், தனது காதலன் ராஜ்குமார் மற்றும் நண்பர் மஞ்சுவுடன் இணைந்து அந்த இரு என்ஜினீயர்களையும் பழிவாங்க முடிவெடுத்தார். வேறு சில நபர்களின் உதவியுடன் மகேந்திரா மற்றும் தருணை ஆட்கடத்தல் செய்த அந்த கும்பல், அவர்களை ஆள்நடமாட்டமில்லாத இடத்திற்கு கொண்டு சென்று கடுமையாகத் தாக்கியது. அத்துடன் மகேந்திராவின் தந்தையிடம் ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டியதோடு, இருவரையும் கொலை செய்துவிட்டு அதனைத் தற்கொலையாகச் சித்தரிக்கவும் திட்டமிட்டனர்.
மகேந்திராவின் தந்தை அளித்த புகாரின்பேரில் மாரத்தஹள்ளி போலீசார் தீவிர விசாரணை நடத்தி, மஞ்சுவின் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கையின் மூலம் உண்மையை வெளிக்கொண்டுவந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் நாகரபாவி பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இருவரையும் காயங்களுடன் மீட்டனர். கடத்தல் மற்றும் கொலை முயற்சியில் ஈடுபட்ட இளம்பெண், அவரது காதலன் உட்பட 11 பேரையும், பாலியல் குற்றச்சாட்டின் பேரில் பாதிக்கப்பட்ட இரு என்ஜினீயர்களையும் போலீசார் கைது செய்தனர்.
தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே மனைவியின் முன்னாள் காதலனுடன் ஏற்பட்ட கள்ளக்காதல் தகராறில், இருவரையும் சமாதானம் செய்யச் சென்ற நண்பர்…
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த அகில் குமார் சந்தக் என்பவர், கடந்த 2019-ஆம் ஆண்டு டெல்லியில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த நூர்ஷிகா…
கேரள மாநிலம் கொச்சி பொன்னுருன்னி பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் பிரபல மலையாள நடிகை அதுல்யா சந்திரா, 41…
நீலகிரி மாவட்டம் பில்லூர்மட்டம் சடையன் கொம்பை பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் திடீரென காணாமல் போனதாக கடந்த…
டெல்லி அரசுப் பேருந்து ஓட்டுநரிடம் வழித்தடம் பற்றிக் கேட்ட பெண் ஒருவர், திடீரென ஓட்டுநருடன் தகராறில் ஈடுபட்டு அவரது காலரைப்…
சென்னையை அடுத்த கொளத்தூர் ஜி.கே.எம் காலனி பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுபான கூடத்தில், அண்ணன் மற்றும் தங்கை இருவரும் மதுபோதையில்…