சர்ச்சைகளுக்கு மத்தியில் குஷ்பூவின் ஆதரவு…! “4 நாட்கள் என் வீட்டில்…” நடிகை திரிஷா குறித்து குஷ்பூ உடைத்த உண்மை…!!

By Devi Ramu on ஆவணி 6, 2026

Spread the love

சமீபகாலமாகப் பல்வேறு அரசியல் மற்றும் தனிப்பட்ட விவாதங்களில் நடிகை திரிஷாவின் பெயர் அடிபட்டு சமூக வலைதளங்களில் பலவிதமான கருத்துகள் உலா வருகின்றன. தஞ்சாவூரில் நடைபெற்ற போராட்டத்தின் போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் திரிஷா குறித்துப் பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி, அது அரசியல் ரீதியிலான கைது நடவடிக்கை வரை சென்று பரபரப்பை ஏற்படுத்தியது. இத்தகைய சூழலிலும் எந்தவிதப் பதிலடியும் கொடுக்காமல் நடிகை திரிஷா வழக்கம் போல அமைதி காத்து வருகிறார்.

இந்நிலையில், தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்குப் பேட்டியளித்த நடிகை குஷ்பூ, திரிஷா குறித்து மிகவும் நேர்மறையாகப் பேசியுள்ளார். திரிஷா மிகவும் அன்பானவர் என்றும், தங்கள் குடும்பத்தில் ஒருவரைப் போல பழகக் கூடியவர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது மகளின் திருமணத்தின் போது திரிஷா நான்கு நாட்கள் தங்கள் வீட்டிலேயே தங்கி இருந்து சிறப்பித்ததாகக் கூறிய குஷ்பூ, அவர் எப்போதும் பாசம் நிறைந்த நல்ல மனிதர் என்று புகழாரம் சூட்டியுள்ளார். இக்கருத்துகள் திரிஷாவின் ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.