பெண்களுக்கே 50% மானியத்தில் ட்ரோன்… ரூ.55 கோடியில் தமிழக அரசு தந்த மாஸ் சர்ப்ரைஸ்… பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பு…!

By Nanthini on ஆவணி 6, 2026

Spread the love

தமிழக வேளாண்மையில் நவீனத் தொழில்நுடபத்தைப் புகுத்தி, பெண்களின் பொருளாதாரத்தைப் உயர்த்தும் நோக்கில் தமிழ்நாடு பட்ஜெட்டில் பல்வேறு சிறப்புத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ‘வெற்றி வான்மகள்’ திட்டத்தின் கீழ் 100 மகளிர் உட்பட 500 நபர்களுக்கு ட்ரோன் இயக்கப் பயிற்சிகள் வழங்கப்பட்டு, முறையான உரிமங்களும் அளிக்கப்பட உள்ளன. இதில் பயிற்சி பெறும் 50 பெண்களுக்கு 50 சதவீத மானியத்தில் ட்ரோன்கள் வழங்கப்பட உள்ளதாகவும், இதற்காக ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் வினோத் தெரிவித்துள்ளார். இது கிராமப்புறப் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதோடு, நவீன வேளாண் தொழில்நுட்பத்தை எளிய முறையில் விவசாயிகளிடம் கொண்டு சேர்க்கவும் பேருதவியாக இருக்கும்.

அதேபோல், நகர்ப்புற மற்றும் கிராமப்புற இல்லத்தரசிகளை ஊக்குவிக்கும் வகையில் ‘வெற்றி இல்லத்தரசி வீட்டுத் தோட்டம்’ திட்டமும் தொடங்கப்படுகிறது. இதன் கீழ் மாடித்தோட்டம் அமைக்கத் தேவையான இடுபொருள்கள், காய்கறி மற்றும் பழச்செடித் தொகுப்புகள், நீரியல் மற்றும் செங்குத்துத் தோட்டங்கள், நிழல்வலைக் குடில்கள் ஆகியவை வழங்க ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், கரூர் மாவட்டத்தில் தென்னை நாற்றுப் பண்ணை, தமிழ்நாடு தென்னை பதப்படுத்தும் கழகம் அமைப்பதுடன், தென்னை டானிக் மற்றும் பூச்சிநோய்களை உயிரியல் முறையில் கட்டுப்படுத்த ரூ.41 கோடியில் ‘தென்னை சிறப்பு திட்டம்’ அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டங்கள் அனைத்தும் விவசாயிகளுக்கும் இல்லத்தரசிகளுக்கும் ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன.