கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்மன்’ திரைப்படத்தை முதலில் இயக்குவதாக இருந்த சுந்தர் சி, எதிர்பாராதவிதமாக அந்தப் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துத் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தினார். 90-களிலிருந்து வணிக ரீதியிலான வெற்றிப் படங்களைக் கொடுத்து வரும் அவர், ரஜினி – கமல் கூட்டணியை சிறப்பாகக் கையாள்வார் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். எனினும், தங்களுக்குள் எந்தவித கருத்து வேறுபாடும் இன்றி சுமூகமாகவே வெளியேறியதாகச் சுந்தர் சி தரப்பில் தெளிவுபடுத்தப்பட்டது.
இவ்விவகாரம் தொடர்பாகப் பேட்டியளித்த சுந்தர் சியின் மனைவியும் நடிகையுமான குஷ்பூ, அத்திட்டத்திலிருந்து வெளியேறும் முடிவைக் கமல்ஹாசனிடம் நேரடியாகத் தெரிவிக்கத் தனது கணவருக்குப் பெரும் தயக்கம் இருந்ததாகக் கூறியுள்ளார். கமல் தனக்கு நெருங்கிய நண்பர் என்பதால், கணவரின் வேண்டுகோளை ஏற்றுத் தானே அவருக்குச் செய்தி அனுப்பி நிலைமையை விளக்கியதாகக் குறிப்பிட்ட குஷ்பூ, இயக்குநரின் முடிவை மதித்து சுந்தர் சி கண்ணியமாக விலகிக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். தற்போது இத்திரைப்படத்தை அஷ்வத் மாரிமுத்து இயக்கி வருகிறார்.
சத்தீஸ்கர் மாநிலம் முங்கேலி மாவட்டத்தில், வயலில் வேலை செய்துவிட்டுத் திரும்பிய பெண் ஒருவர் மீது மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம்…
கர்நாடக மாநிலம் பெலாமக்கியைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் வாணிஸ்ரீ, பெங்களூருவில் உள்ள நகைக்கடை ஒன்றில் பணிபுரிந்து வந்தார். கல்லூரி…
உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தைச் சேர்ந்த டேனிஷ் (40) என்ற தொழிலாளி, மகாராஷ்டிராவில் உள்ள வெல்லத் தயாரிப்பு…
திருப்பூர் மாவட்டம் உடுமலையைச் சேர்ந்த ஜெகதீஷ், 2023-ல் தைவானுக்குத் தனது முனைவர் பட்டப்படிப்பிற்காகச் சென்றபோது, டேட்டிங் செயலி வழியாக ஜோயிங்யிங்…
உத்தரகாண்ட் மாநிலம் சாமோலி மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றைச் சேர்ந்த 19 வயதான சுமித்ரா என்ற இளம்பெண், மாதவிடாய் காலங்களில்…
மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மகளிர் மருத்துவமனையில், பச்சிளம் குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சை பிரிவில் திங்கட்கிழமை…