தொடர்ச்சியாக 4 பிரம்மாண்ட படங்களை கையில் வைத்திருக்கும் KGF பட இயக்குனர்… அட நம்ம தல -யும் இந்த லிஸ்ட்ல இருக்காரா…?

By Begam on சித்திரை 17, 2024

Spread the love

கன்னடத்தில் 2014ல் வெளியான ‘உக்ரம்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரசாந்த் நீல். இதையடுத்து இவர் இயக்கிய KGF  திரைப்படத்தை இந்திய சினிமாவே கொண்டாடியது. கடந்த 2018-ம் ஆண்டு வெளியான இப்படம் பாக்ஸ் ஆபிஸில் 250 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

   

கே.ஜி.எஃப் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து, அதே கூட்டணியில் இரண்டாம் பாகமும் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது. உலகளவில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைகளில் திரையிடப்பட்ட இப்படம் , மூன்றே நாட்களில் 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

   

 

அடுத்தடுத்து இரண்டு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களைக் கொடுத்ததன் மூலம் இந்தியாவின் முன்னணி இயக்குனர்கள் பட்டியலில் இணைந்து இருக்கிறார் பிரசாந்த் நீல். தற்போது இவர் அடுத்தடுத்து இயக்க உள்ள திரைப்படங்கள் குறித்த தகவல்கள் தான் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அதன்படி நடிகர் பிரபாஸை வைத்து’ சலார்’ 2-ம் பாகத்தை இயக்க இருப்பதாகவும், இத்திரைப்படத்தின் சூட்டிங் ஜூன் அல்லது ஜூலையில் தொடங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இதை முடித்த பிறகு ஜூனியர்  NTR ஐ வைத்து NTR31 முதல் பாகத்தை தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து KGF 3 தொடங்க இருப்பதாகவும், மேலும் நடிகர் அஜித்தை வைத்து AK 64 அல்லது AK 65 திரைப்படத்தை இயக்க இருப்பதாகவும் இணையத்தில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.