அரசியல் ஆஃபர் கொடுத்த எம்.ஜி.ஆர்… சரோஜா தேவி வர மறுத்ததன் காரணம் இது தான்..

By vinoth

Updated on:

தமிழ் சினிமாவில் கொஞ்சும் தமிழ் பேசி ரசிகர்களைக் கவர்ந்தவர் சரோஜா தேவி. கர்நாடகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட அவரை தமிழ் ரசிகர்கள் கன்னடத்துப் பைங்கிளி என்று சொல்லி அழைத்து கொண்டாடினர். இவர் தமிழில் 1957ஆம் ஆண்டு வெளியான தங்கமலை ரகசியம் படத்தின் மூலம் அறிமுகமானார்.

அவர் நடித்த படங்கள் ஹிட்டடித்த நிலையில் முன்னணி நடிகையானார். எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி, முத்துராமன் என பல முன்னணி தமிழ் நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார் நடிகை சரோஜா தேவி. தமிழில் மட்டுமே 100 படங்களுக்கு மேல் நடித்துள்ள அவர் கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார்.

   

சினிமாவில் தன்னுடைய உச்சகட்டத்தில் இருக்கும்போதே ஸ்ரீஹர்ஷா என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவர்களின் திருமணத்துக்குப் பிறகு சரோஜா தேவி சினிமாவில் நடிப்பதைக் குறைத்துக் கொண்டு கர்நாடகாவில் செட்டில் ஆனார்.

மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருந்த சரோஜா தேவியின் திருமண வாழ்வு 1986 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்துள்ளது. அவரின் கணவர் ஸ்ரீஹர்ஷா உடல்நலக் குறைவு காரணமாக இயற்கை எய்தினார். அப்போது மனதளவில் மிகவும் உடைந்து போயிருந்துள்ளார் சரோஜா தேவி.

அப்போது அவருக்கு ஆறுதல் சொல்ல சென்ற எம் ஜி ஆர் “இந்த சோகத்தில் இருந்து நீ வெளியே வரவேண்டுமென்றால் அரசியலுக்கு வா” என்று அவரை அழைத்துள்ளார். ஆனால் தனக்கு அரசியலில் ஆர்வம் இல்லை என்று சரோஜா தேவி மறுத்துள்ளார். அதைக் கேட்ட எம் ஜி ஆர் “அப்படியானால் நீ மீண்டும் நடிக்க வேண்டும். அதுதான் உனக்கு சரியான மருந்து” எனக் கூறியுள்ளார்.

அதுதான் சரியானது என்று நம்பிய சரோஜாதேவி அதன் பிறகுதான் மீண்டும் நடிப்புக்கு ரி எண்ட்ரி கொடுத்துள்ளார். அதன் பின்னர் 20 வருடங்களுக்கு மேல் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துக் கலக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.