புடிச்சாலும் புளியங் கொம்பாதான் புடிச்சிருக்காரு… இயக்குனர் ஷங்கர் மருமகன் யார் தெரியுமா..? அவரே கூறிய தகவல்…

By Begam

Published on:

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் ஷங்கர். இயக்குனர் ஷங்கர் அவர்களுக்கு  ஐஸ்வர்யா, அதிதி என்ற மகள்களும், அர்ஜித் என்கிற மகனும் உள்ளனர். இவரின் மூத்த மகளான ஐஸ்வர்யா 2021ல்  ரோஹித் என்பவரை முதலில் திருமணம் செய்துகொண்டார்.

   

ஐஸ்வர்யாவின் முதல் கணவர் ரோஹித் ஒரு கிரிக்கெட் வீரர். திருமணமான சில மாதங்களிலேயே ஷங்கரின் மருமகன் ரோஹித், பாலியல் வழக்கில் சிக்கினார்.  இந்த புகாரில் சிக்கியதை தொடர்ந்து ஷங்கரின் மூத்த மகளான ஐஸ்வர்யா கணவரை விவாகரத்து செய்துவிட்டார்.

 

இதைத்தொடர்ந்து அவருக்கு 2வது திருமணம் முடிக்க மாப்பிள்ளை தேட ஆரம்பித்தார் இயக்குனர் ஷங்கர். இறுதியாக தனது உதவி இயக்குனர் தருண் கார்த்திகேயன் என்பவருக்கு தனது மகளை பிரம்மாண்டமான முறையில் திருமணம் செய்து வைத்தார். இந்த  திருமண விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமலஹாசன், மு.க.ஸ்டாலின்,  சூர்யா, அட்லீ என   பல்வேறு திரைபிரபலங்கள் கலந்து கொண்டனர்.

 

தற்பொழுது திருமணம் முடிந்த கையோடு ஷங்கரின் மகள் தனது கணவருடன் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டுள்ளார். அந்த சந்திப்பில் பேசிய ஷங்கரின் மருமகன, ‘ தனது அப்பா US-ல் IT கம்பெனி ஒன்றை சொந்தமாக நடத்துவதாகவும், தான் IT படித்திருப்பதாகவும்’ கூறினார். காத்திருந்தாலும் இயக்குனர் ஷங்கர் தனது மகளுக்கு நல்ல மருமகனை தேடி கண்டுபிடித்திருக்கிறார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by NewsTamil 24×7 (@newstamiltv24x7)

author avatar