தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. ஒரு பக்கம் முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய கூட்டணியை பலமாக வைத்துக்கொண்டு மீண்டும் திமுக ஆட்சியை தமிழகத்தில் நிலைநாட்டி விடலாம் என்ற எண்ணத்தில் அதற்கான வேலைகளை செய்து கொண்டிருக்கின்றார். மறுபக்கம் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக இந்த முறை தமிழகத்தில் இடம் பிடிக்கும் என இபிஎஸ் ஓடிக்கொண்டிருக்கின்றார்.என்னதான் அனைத்து கட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டிருந்தாலும் திமுக கூட்டணி பலமாக இருப்பதால் வெற்றி நமக்கு தான் என்று முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கையில் உள்ளார்.
இந்நிலையில் தேர்தல் வந்து விட்டாலே ஸ்பெஷல் ஆயுதம் ஒன்றை கையில் எடுப்பது திமுகவின் வழக்கமாகும். அந்த வகையில் தற்போது இபிஎஸ் வலது கையாக இருக்கும் தங்கமணி, செங்கோட்டையன், ராஜேந்திர பாலாஜி, காமராஜ், செல்லூர் ராஜு மற்றும் மணிகண்டன் ஆகிய ஆறு முக்கிய தலைவர்களை அதிமுகவிலிருந்து தூக்க திமுக பக்காவாக ஸ்கெட்ச் போட்டு வேலை செய்கிறதாம். இந்த செய்தி வெளியான உடனே தங்கமணி மறுப்பு தெரிவித்த நிலையில் மற்ற தலைவர்கள் சைலண்டாக இருப்பதை பார்த்தால் திமுகவின் பிளான் சரிதான் என்ற கேள்வி எழுந்துள்ளது.
