“ஐயோ, மகனே இப்படி பண்ணிட்டியே”… பெற்ற தாயையே பலாத்காரம் செய்த காம கொடூரன்… டெல்லியை அதிர வைத்த கொடூர சம்பவம்…!

By Nanthini on ஆவணி 18, 2025

Spread the love

டெல்லியில் உள்ள ஹவுஸ் காசி பகுதியை சேர்ந்த 65 வயது பெண் ஒருவர் தன்னுடைய குடும்பத்தினருடன் வசித்து வருகின்றார். இவருடைய கணவர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ள நிலையில் ஒரு மகளுக்கு திருமணம் முடிந்த நிலையில் மற்ற இரண்டு பிள்ளைகள் மற்றும் கணவருடன் டெல்லியில் வசித்து வருகின்றார். கடந்த மாதம் 17ஆம் தேதி 65 வயது அந்தப் பெண் தனது கணவர் மற்றும் இளைய மகனுடன் சவுதி அரேபியாவிற்கு பயணம் சென்றார்.

அவருடைய மூத்த மகன் வீட்டில் தனிமையாக இருந்த நிலையில் குடும்பத்தினர் சவுதி அரேபியாவுக்கு சென்றபோது அந்த வாலிபர் தன்னுடைய தந்தைக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தாய்க்கு வேறொரு நபருடன் கள்ளத்தொடர்பு இருப்பதாகவும், அதனால் உடனடியாக அவரை விவாகரத்து செய்து விடுங்கள் என்றும் கூறியுள்ளார். பிறகு குடும்பத்தினர் வீடு திரும்பிய போது பெற்ற தாய் என்றும் பார்க்காமல் அந்த இளைஞர் தன்னுடைய தாயை அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனால் மனமுடைந்த அந்தப் பெண் திருமணமான தனது மூத்த மகளின் வீட்டுக்கு சென்று விட்டார்.

   

பிறகு கடந்த 11ம் தேதி மீண்டும் தனது வீட்டுக்கு திரும்பிய நிலையில் அந்த 39 வயது வாலிபர் தனது தாயிடம் தனியாக பேச வேண்டும் என்று கூறி அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்துள்ளார். கடந்த காலத்தில் கள்ளத்தொடர்பு வைத்ததற்கு தண்டனையாக இதை செய்வதாக கூறி முதலில் பலாத்காரம் செய்த அந்த கொடூரன் பிறருக்கு அடுத்த சில நாட்களில் மீண்டும் ஒரு முறை பலாத்காரம் செய்துள்ளான். இதனால் மனமுடைந்த அந்தப் பெண் தனது இளைய மகனுடன் சேர்ந்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து அந்த வாலிபரை கைது செய்துள்ள போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.