கேரள இளைஞர் ஒருவர் தந்தைக்கு புல்லட் வாங்கி கொடுத்து அவரின் 14 ஆண்டு கால கனவை நிறைவேற்றிய வீடியோ வெளியாகி பலரையும் நெகிழ வைத்துள்ளது. கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த உள்ளடக்க உருவாக்கினரான அஸ்வின், புத்தம் புதிய ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 பைக்கை தந்தைக்கு சர்ப்ரைஸாக வாங்கி கொடுத்துள்ளார். மோட்டார் சைக்கிளின் சாவியை அஸ்வின் தனது தந்தையிடம் ஒப்படைக்கும் தருணம் பலரையும் கலங்க வைக்கிறது. முதலில் அவருடைய தந்தை அதிர்ச்சி அடைந்து பரிசு தனக்கானது அல்ல என்று நினைக்கின்றார்.
வீடியோவில் அஸ்வின், இல்லை, இது எனக்கானது அல்ல, என்னுடையது அல்ல, இது உங்களுக்கானது அப்பா என்று கூறி தந்தையை உணர்ச்சி பொங்க வைக்கின்றார். 14 வருடங்களுக்கு முன்பு அவர் ஒரு புல்லட் வாங்க விரும்புவதாக மகனிடம் கூறியுள்ளார். பல ஆண்டுகளாக அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கும் ஒருபோதும் அதனை வாங்காமல் தன் குடும்பத்திற்காக அனைத்தையும் விட்டுக் கொடுத்துள்ளார். தன் விருப்பத்தை குடும்பத்துக்காக விட்டுக் கொடுத்த தந்தைக்கு 14 ஆண்டுகள் கழித்து அவருடைய கனவை நிறைவேற்றிய மகனின் செயலை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
மத்திய பிரதேசத்தில் 7 மாத கர்ப்பிணி மனைவியை கொலை செய்த கணவருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை, ஜபல்பூர்…
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு ஏற்பட்ட உட்கட்சிப் பூசல்களால் அதிமுக பல பிரிவுகளாக உடைந்தது. இறுதியாக எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் பொறுப்பை…
வாட்ஸ்அப்பில் ‘ஏர்டெல் க்ரோத்’ என்ற பெயரில் உலா வரும் லிங்க்குகளை பொதுமக்கள் யாரும் கிளிக் செய்ய வேண்டாம் என சைபர்…
அமெரிக்காவின் இரண்டாம் பெண்மணியான உஷா வான்ஸ் குழந்தைகளுக்காக நடத்தும் 'ஸ்டோரிடைம் வித் தி செகண்ட் லேடி' என்ற சிறார் பாட்காஸ்ட்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் தோல்வியால் தான் சோர்வடையவில்லை என்றும், சோர்வு நம்மை அண்டாமல் பார்த்துக் கொள்ளும் தலைமைப் பொறுப்பு தனக்கு…
இண்டிகோ நிறுவனம் குறைந்த லக்கேஜுடன் பயணிப்பவர்களுக்காக 'இண்டிகோ லைட்' என்ற புதிய எகானமி கட்டண முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ்,…