சமூக வலைதள பக்கத்தில் பெண்களை பாலியல் தொல்லை செய்ததாக பாலக்காடுஎம்எல்ஏ ராகுல் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து இவரை வடகரா தொகுதி காங்., எம்பி ஷஃபி பரம்பில் ஆதரிப்பதாக குற்றம்சாட்டி, DYFI அமைப்பினர் நேற்று அவருடைய காரை வழிமறித்தார்கள். இந்த் நிலையில், இதனை கண்டித்து திருவனந்தபுரத்தில் உள்ள கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் வீட்டை காங்கிரஸ் தொண்டர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் உச்சகட்ட பரபரப்பு நிலவியுள்ளது.
