2 பிள்ளைகளுக்கு தாய்….! “அக்காள் கணவர் மீது தீராத மோகம்…” மனைவியை ஏமாற்றி அழைத்து சென்ற வாலிபர்…. பின் நடந்த கொடூரம்…!!

By Devi Ramu on ஆவணி 28, 2025

Spread the love

தெலுங்கானா மாநிலம் கோடூரைச் சேர்ந்தவர் ஸ்ராவணி. கடந்த 2014-ஆம் ஆண்டு ஸ்ராவணி சைலம் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ஸ்ராவணி தனது அக்காள் கணவருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் காரணமாக கணவர் மற்றும் பிள்ளைகளை பிரிந்து அவருடன் சென்று விட்டார். பின்னர் மீண்டும் தனது கணவரை தேடி வந்து அடைக்கலம் கேட்டார்.

உடனே சைலம் தனது மனைவியை ஏற்றுக்கொண்டார். இருப்பினும் ஸ்ராவணி அடிக்கடி செல்போனில் யாரிடமும் பேசியதாக தெரிகிறது. இதனை சைலம் கண்டித்ததால் கோபத்தில் ஸ்ராவணி தனது பிள்ளைகளுடன் மகபூப் நகரில் இருக்கும் தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் உச்சகட்ட கோபமடைந்த சைலம் தனது மனைவியை கொலை செய்ய திட்டமிட்டு நைசாக பேசி அவரை பைக்கில் அழைத்துச் சென்றார்.

   

ஒரு காட்டுப் பகுதிக்கு அருகே சென்றபோது சீதாப்பழம் பறிக்கலாம் என கூறி ஏமாற்றி அழைத்துச் சென்று துப்பட்டாவால் ஸ்ராவணியின் கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர் குற்றத்தை மறைக்க தனது மனைவியின் உடல் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றார்.

   

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இளம்பெண்ணை உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் சைலத்தை பிடித்து விசாரித்ததில் அவர் உண்மையை ஒப்புக்கொண்டார். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.