பாஜக கூட்டணியில் இருக்கும் டிடிவி தினகரன் விஜய்க்கு ஆதரவாக வெளிப்படையாக பேசியுள்ளார். சமீபத்தில் சர்வே எடுத்தவர்கள் சொல்வதைப் பார்த்தால் 2026 தேர்தலில் விஜயகாந்த் ஏற்படுத்திய தாக்கத்தை விட 2026 தேர்தலில் விஜய் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மேலும் விஜயால் பல கட்சிகளுக்கு கடும் பாதிப்பு ஏற்படும். இதைக் கூறுவதால் தமிழக வெற்றி கழகம் கட்சியுடன் கூட்டணிக்கு செல்வேன் என்று அர்த்தம் இல்லை என்றும் மறைமுகமாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
