நடிகை ஸ்ரீவித்யா, தமிழ் சினிமாவில் மறக்க முடியாத ஒரு நடிகையாக வலம் வந்தவர். ஆரம்பகாலத்தில் கமல், ரஜினி போன்றவர்களுக்கு நாயகியாக நடித்தவர் ஒரு கட்டத்துக்கு பிறகு அம்மா, அக்கா கேரக்டர்களில் நடித்தார். அபூர்வ சகோதரர்கள் படத்தில் கமலுக்கு மனைவியாகவும், அதே படத்தில் தன் பிள்ளைகளான கமலுக்கு அம்மாவாகவும் நடித்திருப்பார். விஜய் அம்மாவாக காதலுக்கு மரியாதை படத்தில், கிளைமேக்ஸ் காட்சியில் அவரது நடிப்பு, வேற லெவலில் இருக்கும். அடுத்து ஆனந்தம் படத்தில் மம்முட்டி அம்மாவாக நடித்திருப்பார். காதலா காதலா படத்தில் ரம்பா அம்மாவாக நடித்திருப்பார். எனினும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, கேரளாவில் இறந்தார்.

நடிகை ஸ்ரீவித்யாவின் மறைவு குறித்து, அவரது அண்ணன் சங்கரின் மனைவி விஜயலட்சுமி கூறியதாவது, கடைசி காலத்தில் ஸ்ரீவித்யா, மருத்துவமனையில் இருந்த போது உயில் எழுதியதாக ஒரு விஷயம் எங்களுக்கு தெரிய வருகிறது. அதில் அவரது சொத்துகளை பயன்படுத்தி நடனக்கலைஞர்களுக்கான ஒரு நல அமைப்பை உருவாக்கவும், வசதியற்ற ஆனால் நடனத்தில் ஆர்வம், திறமை உள்ள குழந்தைகளுக்கு உதவும் வகையிலும் ஒரு டிரஸ்ட்டை செயல்படுத்தவும் அதற்காக அவரது சொத்துகளை பயன்படுத்தவும் அந்த உயிலில் கூறியிருக்கிறார். ஆனால் அந்த உயிலின்படி எதுவுமே இதுவரை நடக்கவில்லை.

இதில் மலையாள நடிகரான கணேஷ்குமார் என்பவர்தான், அந்த டிரஸ்டி துவங்க பொறுப்பாளர் என்று ஸ்ரீவித்யா கையெழுத்திட்ட டாகுமென்ட் ஒன்றை காட்டியுள்ளார். ஆனால், அது ஸ்ரீவித்யா மருந்து போட்ட மயக்கத்தில் சுயநினைவே இல்லாத போது பெறப்பட்ட கையெழுத்து என, அங்கிருந்த ஒரு நர்ஸ் என்னிடம் பேசும்போது தெரிவித்தார். சென்னை, கேரளாவில் இருந்த அவரது சொந்த வீடுகள், கார்கள், பல கிலோ மதிப்பிலான நகைகள், பிளாட்டிணம், நில பத்திர சொத்துகள், பொருட்கள் என பல கோடி மதிப்பிலான சொத்துகள் என்ன ஆனது என்றே தெரியவில்லை.

ஆனால் ஒரு குறிப்பிட்ட மருந்தை, மாத்திரை தந்தால் இன்னும் ஸ்ரீவித்யாவை காப்பாற்றி வாழ வைக்க முடியும் என்று சொன்னபோது, அதற்கான வசதி இல்லை. பணம் இல்லை என நடிகர் கணேஷ்குமார் கூறியதாக அந்த டாக்டரே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். ஸ்ரீவித்யா இறந்த பிறகுதான், அந்த .உயில் விஷயமே எங்களுக்கு தெரியவில்லை.
ஸ்ரீவித்யா இறந்த பிறகு, சில ஆண்டுகளுக்கு பின், இதுபற்றி கேரள முதல்வர் உம்மன் சாண்டி என்னையும், என் கணவரையும் அழைத்து நடந்த சம்பவம், உயில் குறித்து கேட்டறிந்தாா். தன்னால் இயன்ற உதவிகளை செய்வதாகவும் உறுதியளித்தார். ஆனால் அதற்கு பிறகும் எதுவும் நடக்கவில்லை, என்று கூறியிருக்கிறார் ஸ்ரீவித்யாவின் அண்ணன் மனைவியான நாத்தனார் விஜயலட்சுமி.
