அந்த ஏஜென்சிக்கு அர்ச்சனா 13 லட்சம் தரணும்.. இது உண்மையான வெற்றி இல்ல.. பகீர் கிளப்பிய ரவீந்தர்

By Sumathi

Updated on:

விஜய் டிவியில் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக நடந்து வந்த பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் விஜய் டிவி ராஜா ராணி சீரியல் நடிகை அர்ச்சனா, டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். இறுதி போட்டியில் இவர் வென்றது குறித்து பலவிதமான சர்ச்சைகள் கிளம்பி வருகின்றன. இதுகுறித்து ரவீந்தர் ஒரு நேர்காணலில் கூறியதாவது, அர்ச்சனாவுக்கு, ஜிஎஸ்டி, டிடிஎஸ் வரியினங்கள் போக சில லட்சங்கள் பிடித்த பிறகு மீதி தொகையை தான் வழங்குவார்கள். அதுமட்டுமின்றி கார் மற்றும் பலவிதமா பரிசு பொருட்கள் கிடைத்துள்ளது.

   

ஒரு ஏஜன்சி மூலம் தனக்கு அதிக ஓட்டுகள் வரும்படி அர்ச்சனா செய்ததாகவும் அதற்கு ரூ. 13 லட்சம் அவர் கொடுக்க வேண்டி இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அதற்கான வாய்ப்புகள் உள்ளன. விஜய் டிவியில் பணத்தை வாங்கியதும் அந்த ஏஜன்சிக்கு சென்று அர்ச்சனா செட்டில்மென்ட் செய்ய வேண்டும். இதில் வின்னர், ரன்னராக வரவேண்டிய இருவர் மாயா மற்றும் தினேஷ் இருவர் மட்டும்தான்.

அதாவது பெய்டு பாக்ஸ் முறைப்படி, டிஜிட்டலி மல்டிபையிங் இன் இன்கிரீசிங் நியூமரிக்கல் ஓன் ஜெனரேட்டர் என்ற முறைப்படி இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, நிறைய ஓட்டுகளை ஒருவருக்கு விழும்படி செய்ய முடியும். அதைத்தான் அந்த ஏஜன்சி செய்திருக்கிறது. இதை தொழில்நுட்பத்தில் பண்ண முடியும்.

ஆனால் அர்ச்சனா அதை செய்தாரா, என்று உறுதியாக சொல்ல முடியாது. ஆனால் செய்திருக்க அதிக வாய்ப்பிருக்கிறது. நேரில் பார்க்காமல் அதை உறுதியாக சொல்ல முடியாது. வேறு வேறு காரணங்களுக்காக சர்வே பண்ண இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துவாங்க. ஆனால், நியாயமான, இயல்பான ஓட்டுகளை ஒப்பிட்டு இந்த முறையில் பார்த்தால் மணி, தினேஷ், மாயா போன்றவர்களுக்குதான் வாய்ப்பு என்று பரபரப்பாக கூறியிருக்கிறார் ரவீந்தர்.

author avatar
Sumathi