CINEMA
“மானத்தை வாங்கிடாத” தன் ஆசையை சொன்ன கீர்த்தி சுரேஷுக்கு வார்னிங் கொடுத்த தந்தை.. அப்படி என்னவா இருக்கும்..?
முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் ஒரு சில மலையாளத் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். தமிழில் இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக தனது பயணத்தை ஆரம்பித்தார். ஆனால் எதிர்பார்த்த அளவு அந்த படம் வரவேற்பை பெறவில்லை. அதன் பிறகு சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரஜினி முருகன், ரெமோ உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
இந்த படங்கள் சூப்பர் ஹிட் ஆனது. தனுஷ்க்கு ஜோடியாக தொடரி, விஜய்க்கு ஜோடியாக பைரவா, சூர்யாவுக்கு ஜோடியாக தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களிலும் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். சூப்பர் ஸ்டாரின் அண்ணாத்த திரைப்படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடித்துள்ளார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு திரைப்படங்களிலும் கீர்த்தி சுரேஷ் கவனம் செலுத்தி வருகிறார்.
கீர்த்தி சுரேஷ் பிரபல நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடித்தார். அந்த படத்தில் நடித்ததற்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தது. கடைசியாக கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ரகு தாத்தா திரைப்படம் ரிலீஸ் ஆகி சுமாரான வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது. என்னை அமெரிக்காவிற்கு அனுப்பி படிக்க வைக்க வேண்டும் என்பதுதான் என் அம்மா, அப்பாவின் ஆசை. ஆனால் எனக்கு மாடலிங் மீதுதான் அதிக ஆர்வம்.
ஹீரோயினாக வேண்டும் என விருப்பப்பட்டேன். எனது ஆசையை அம்மாவிடம் தான் முதலில் கூறினேன். அப்போது அம்மா சினிமாவில் நடிக்க வேண்டும் என்றால் முதலில் நீ நேரத்தை சரியாக கடைபிடிக்க வேண்டும். அதோடு இயக்குனர் முதல் யூனிட் பாய் வரை அனைவருக்கும் மரியாதை கொடுக்க வேண்டும் கூறிவிட்டார். என் ஆசையை அப்பாவிடம் கூறும் போது நான் சினிமாவில் நல்ல பெயர் வாங்கி வைத்திருக்கிறேன். நீ என் மானத்தை வாங்கிடாத என்று கூறியதாக கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.