Connect with us

“Sorry, என்னை எல்லாரும் மன்னிச்சிடுங்க”.. வீடியோ வெளியிட்டு வருத்தம் தெரிவித்த பேபி சாரா..!!

CINEMA

“Sorry, என்னை எல்லாரும் மன்னிச்சிடுங்க”.. வீடியோ வெளியிட்டு வருத்தம் தெரிவித்த பேபி சாரா..!!

ஹிந்தியில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான 404 என்ற திரைப்படம் மூலமாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்தான் நடிகை சாரா அர்ஜுன். அந்த திரைப்படத்தில் நடிக்கும் போது இவருக்கு ஐந்து வயது. அதே ஆண்டு தமிழிலும் குழந்தை நட்சத்திரமாக இவர் அறிமுகமானார். இவர் தமிழில் தெய்வத்திருமகள் திரைப்படத்தில் தான் முதல் முதலாக நடித்திருந்தார். அந்த திரைப்படத்தில் நடிகர் விக்ரமுக்கு மகளாக நடித்திருந்தார்.

   

இவருக்கும் விக்கிரமுக்கும் இடையேயான தந்தை மகள் உறவை மையமாக வைத்து அந்த திரைப்படம் எடுக்கப்பட்ட நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஐந்து வயதிலேயே இவருடைய நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ஒரே படத்தில் தன்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தி உச்சத்திற்கு சென்று விட்டார். இதனால் அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிய தொடங்கின.

   

 

இதனைத் தொடர்ந்து சைவம், சில்லு கருப்பட்டி, பொன்னியின் செல்வன் என அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். தற்போது 18 வயதாகும் இவருக்கு தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னடம் என பழமொழி திரைப்படங்களில் பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் விவேக் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள கொட்டேஷன் கேங் என்ற திரைப்படத்தில் இவர் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் பிரியாமணி,சன்னி லியோன் மற்றும் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

கொலை சம்பவத்தை நடத்துவதற்கு ஏலம் விட்டு கொலையாளிகளை தேர்வு செய்வது தான் இந்த படத்தின் கதை. இப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் நடிகை சாரா அர்ஜுன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் , தான் மிகவும் பிசியாக இருப்பதால் தன்னால் படத்தின் பிரமோஷனுக்கு வர முடியவில்லை எனவும் அதனால் தான் வருந்துவதாக கூறி மன்னிப்பு கோரி உள்ளார். மேலும் படம் ஆகஸ்ட் 30 வெளியாக உள்ள நிலையில் தான் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருப்பதாகவும் அனைவரும் தவறாமல் படத்தைப் பார்த்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

 

author avatar
Nanthini
Continue Reading
You may also like...

More in CINEMA

To Top