“மிகப்பெரிய சாதனையாளர்”.. ஐசிசி புதிய தலைவரான ஜெய்ஷாவுக்கு நக்கலாக வாழ்த்து தெரிவித்த பிரகாஷ் ராஜ்.. வைரலாகும் பதிவு..!

By Nanthini on ஆகஸ்ட் 30, 2024

Spread the love

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் பொதுச்செயலாளரும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் மகனுமான ஜெய்ஷா, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஐசிசி யின் புதிய தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். வருகின்ற டிசம்பர் 1 முதல் ஐசிசி தலைவராக அவர் பொறுப்பேற்க உள்ளார்.

   

இதனைத் தொடர்ந்து அவருக்கு பல்வேறு பிரபலங்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் ஐசிசி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜெயிஷாவை கிண்டல் அடிக்கும் விதமாக நடிகர் பிரகாஷ்ராஜ் ஒரு பதிவை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

   

 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஐசிசி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள பெரிய சாதனையாளரை கைதட்டி வரவேற்போம். ஜெய்ஷா ஒரு சிறந்த பேட்ஸ்மேன், பந்து வீச்சாளர், விக்கெட் கீப்பர். இந்திய கிரிக்கெட் உருவாக்கிய சிறந்த ஆல் ரவுண்டர். ஒருமனதாக ஐசிசி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துக்கள் என்று பிரகாஷ்ராஜ் பதிவிட்டுள்ளார். இது அவரை கிண்டல் அடிக்கும் வகையில் இருப்பதால் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.