“பாண்டிய நாட்டிலிருந்து உங்கள் கயல்விழி பாண்டியன்”.. கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட வீடியோ வைரல்..!!

By admin on ஆவணி 14, 2024

Spread the love

முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் ஒரு சில மலையாளத் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். தமிழில் இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக தனது பயணத்தை ஆரம்பித்தார். ஆனால் எதிர்பார்த்த அளவு அந்த படம் வரவேற்பை பெறவில்லை. அதன் பிறகு சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரஜினி முருகன், ரெமோ உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

   

இந்த படங்கள் சூப்பர் ஹிட் ஆனது. தனுஷ்க்கு ஜோடியாக தொடரி, விஜய்க்கு ஜோடியாக பைரவா, சூர்யாவுக்கு ஜோடியாக தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களிலும் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். சூப்பர் ஸ்டாரின் அண்ணாத்த திரைப்படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடித்துள்ளார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு திரைப்படங்களிலும் கீர்த்தி சுரேஷ் கவனம் செலுத்தி வருகிறார்.

   

 

பழம்பெரும் நடிகை மறைந்த சாவித்திரியின் வாழ்க்கை திரைப்படத்திலும் தனது அற்புதமான நடிப்பை கீர்த்தி சுரேஷ் வெளிப்படுத்தினார். இப்போது கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ரகு தாத்தா திரைப்படம் நாளை திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கயல்விழி பாண்டியன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பட குழுவினர் ப்ரொமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டார்.

Raghu Thatha (2024) - IMDb

இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் மதுரையில் வைத்து என்ஜாய் செய்த வீடியோவை வெளியிட்டுள்ளார். மேலும் பாண்டிய நாட்டில் இருந்து உங்கள் கயல்விழி பாண்டியன் என கேப்ஷன் வைத்துள்ளார். அந்த வீடியோவுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவிக்கின்றனர். மேலும் கீர்த்தி சுரேஷ் அழகாக இருப்பதாக வர்ணித்து வருகின்றனர்.