பிரபல இயக்குனரான வெங்கட் பிரபு விஜயை வைத்து தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தை எடுத்து முடித்துள்ளார். இந்த படத்தில் விஜய் அப்பா, மகன் என இரண்டு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சினேகா, லைலா, பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கோட் திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 5-ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆக உள்ளது. விஜய் தனது 69-ஆவது படத்துடன் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் ஈடுபட போவதாக அறிவித்தார்.

விஜயின் 69-ஆவது படத்தை ஹச்.வினோத் தான் இயக்குகிறார். இதனால் விஜய் நடிக்கும் படங்கள் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். படத்திலிருந்து ரிலீசான மூன்று பாடல்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படத்தில் AI தொழில்நுட்பம் மூலம் இளமையான விஜய் வரும் காட்சியை உருவாக்கியுள்ளனர். அது மக்களிடையே அவ்வளவாக வரவேற்பை பெறவில்லை.

ஏற்கனவே அஜித்தை வைத்து வெங்கட் பிரபு மங்காத்தா திரைப்படத்தை இயக்கினார். இந்த படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்த நிலையில் சமீபத்தில் வெங்கட் பிரபு அளித்த பேட்டியில் கூறியதாவது, GOAT படத்தை ஆரம்பிக்கும்போதே அஜித் சார் என்னிடம் மங்காத்தா மாதிரி 100 மடங்கு இருக்கணும்டா. GOAT படம் அந்த மாதிரி இருக்கணும். அப்படி பண்ணுன்னு சொன்னாரு. அவருக்கு எவ்வளவு பெரிய மனசு இருந்தால் இந்த வார்த்தையை சொல்லி இருப்பார். அஜித் சார் சொன்ன மாதிரி செஞ்சிருக்கேன்னு நினைக்கிறேன்.

மக்கள் தான் எத்தனை மடங்கு என்று பார்த்துட்டு சொல்லணும் எனகl கூறியுள்ளார். மேலும் GOAT திரைப்படம் ஒரு கற்பனை கதை தான். நிஜத்திற்கு நெருக்கமாக பண்ண முயற்சி பண்ணி இருக்கோம். SATS- ன்னு பெயர். Special Anti Terrorist Squad அப்படின்னு அத சொல்லுவாங்க. அது RAW அமைப்போட சேர்ந்து வேலை செய்கிற ஒரு குரூப். அதில் காலத்தில் சிறப்பாக வேலை பார்த்தவங்க இருக்காங்க. அவங்க அந்த காலத்துல பண்ண ஒரு விஷயம் இப்போ ஒரு பிரச்சனையா வந்து அவங்க முன்னாடி நிக்குது. அத அவங்க எப்படி பேஸ் பண்ணி ஜெயிக்கிறார்கள் என்பது தான் GOAT படத்தோட மையக்கருத்து என கூறியுள்ளார்.

