தென்னிந்திய சினிமாவில் கொடிகட்டி பறந்து கொண்டிருந்த கீர்த்தி சுரேஷ்.. அந்த படத்தில் நடித்தால் பட வாய்ப்புகளை இழந்தாரா..?

By admin on ஆனி 14, 2024

Spread the love

பிரபல நடிகையான கீர்த்தி சுரேஷ் கடந்த 2015-ஆம் ஆண்டு தமிழில் ரிலீசான இது என்ன மாயம் படத்தின் மூலம் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தார். இவர் முன்னணி நடிகர்களான விஜய், சிவகார்த்திகேயன், தனுஷ், சூர்யாவுடன் இணைந்து நடித்துள்ளார். தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

கீர்த்தி சுரேஷ்-ஆ இது!! சேலையில் ரசிகர்களை மயக்கும் போஸில் வெளியிட்ட புகைப்படங்கள்.. - விடுப்பு.கொம்

   

மலையாளத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு ரிலீசான கீதாஞ்சலி படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். கீர்த்தி சுரேஷ் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரஜினி முருகன், ரெமோ ஆகிய படத்திலும், தனுஷுக்கு ஜோடியாக தொடரி, விஜய்க்கு ஜோடியாக பைரவா, விஷாலுக்கு ஜோடியாக சண்டைக்கோழி 2 சூர்யாவுக்கு ஜோடியாக தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

   

பாலிவுட்டில் அறிமுகமாகும் நடிகை கீர்த்தி சுரேஷ் | Keerthy Suresh set for her Bollywood debut with Varun Dhawan - hindutamil.in

 

முதலில் கீர்த்தி சுரேஷ் நடித்த படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்றது. ஆனால் ஒரே ஒரு படத்தால் கீர்த்தி சுரேஷின் சினிமா வாழ்க்கை தலைகீழாக மாறியது என்று தான் கூற வேண்டும். கடந்த 2022-ஆம் ஆண்டு அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் சாணி காகிதம் என்ற படத்தில் நடித்தார். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர்.

ஆள் அடையாளம் தெரியாமல் மாறிவிட்ட நடிகை கீர்த்தி சுரேஷ்! புகைப்படம் உள்ளே! - Tamil Spark

இதனை சுந்தர் ஆறுமுகம் தயாரித்தார். கடந்த 2022-ஆம் ஆண்டு மே மாதம் ஆறாம் தேதி சாணிக்காயுதம் திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆனது. ஆனால் எதிர்பார்த்த அளவு இந்த படம் வெற்றி பெறவில்லை. இந்த ஒரு படத்திற்கு பிறகு தான் கீர்த்தி சுரேஷின் சினிமா வாழ்க்கையில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் கிடைக்காமல் கீர்த்தி சுரேஷ் தவித்து வருவதாக கூறப்படுகிறது.

saani kaayidham review : சிதைத்தவர்களை பழிவாங்கும் இருவர்! – News18 தமிழ்