எனக்கு குழந்தை பெத்துக்கணும்னு விருப்பம் கிடையாது.. ஆனால் என் பொண்ணு பிறந்த நாளை மறக்கவே முடியாது.. மனம் திறந்து பேசிய நடிகை தேவயானியின் கணவர்..!!

By admin on ஆனி 14, 2024

Spread the love

90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தேவயானி. இவர் விஜய், அஜித், சூர்யா, விக்ரம் ஆகிய முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், பெங்காளி உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களிலும் தேவயானி ஹீரோயினாக நடித்துள்ளார். திருமணமான பிறகு தேவயானி பல சீரியல்களிலும் நடித்து வந்தார்.

Rajkumar About Devayani Family Problems

   

தேவயானி நடித்த கோலங்கள் சீரியல் 6 வருடம் வெற்றிகரமாக ஓடியது. அதன் பிறகு ஜீ தமிழில் ஒளிபரப்பான புது புது அர்த்தங்கள் சீரியலிலும் தேவயானி நடித்தார். கடந்த 2021-ஆம் ஆண்டு தேவயானி இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது காதலுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. பின்னர் நண்பர்கள் முன்னிலையில் திருத்தணி கோவிலில் வைத்து தேவயானி ராஜகுமாரனை திருமணம் செய்து கொண்டார்.

   

இயக்குநர் இராஜகுமாரன் - மகளதிகாரம் | டயட்கள்... ஏற்றது எது? | சவால்கள் பகிரும் அனிதா சம்பத் |

 

சமீபத்தில் ராஜகுமாரன் அளித்த பேட்டியில் கூறியதாவது, எனக்கு குழந்தை பெத்துக்கணும்னு விருப்பம் கிடையாது. இந்த மோசமான உலகில் ஏன் என்னை கொண்டு வந்தீர்கள். நானும் போராட வேண்டுமா என்று சூழ்நிலையை என் பிள்ளைகளுக்கு உருவாக்க கூடாது என நினைத்தேன். இதனால் தேவயானியிடம் உனக்கு நானும் எனக்கு நீயும் என இருந்து கொள்ளலாம் என கூறினேன். ஆனால் அதனை அவர் கேட்கவில்லை என ஜாலியாக கூறினார். மேலும் குழந்தை வேண்டும் என ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நாங்கள் வேண்டிக் கொண்டோம்.

 

View this post on Instagram

 

A post shared by Aval Vikatan (@avalvikatan)

 

என் மகள் பிறந்த நாளை மறக்கவே முடியாது. பிப்ரவரி கடைசி அல்லது மார்ச் முதல் வாரத்தில் டெலிவரி ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் வைகுண்ட ஏகாதேசி அன்று 12.5 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கும் போது என் மகள் பிறந்தார். அந்த நாளை என்னால் மறக்கவே முடியாது. அப்படி ஒரு விசேஷமான நாள். குழந்தை வேண்டும் என ஸ்ரீரங்கரிடம் வேண்டி வைகுண்ட ஏகாதசி அன்று என் மகள் பிறந்தார் என ராஜகுமாரன் இன்டர்வியூவில் பேசியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Aval Vikatan (@avalvikatan)