விஜய் கதாபாத்திரத்தை எனக்கு கொடுங்க.. இயக்குனருடன் சண்டை போட்டு படத்தில் நடிக்காமல் கிளம்பிய அஜித்குமார்..!!

By admin on ஆனி 14, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வளம் வருபவர்கள் விஜய் அஜித். கடந்த 1995-ஆம் ஆண்டு ராஜாவின் பார்வையிலே திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விஜயும் அஜித்தும் இணைந்து நடித்தனர். இதில் இந்திரஜா, காயத்ரி சாஸ்திரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். ராஜாவின் பார்வையில் படத்திற்கு இளையராஜா இசை அமைத்துள்ளார்.

rajavin parvailye 26th year: all palylist there | ராஜாவின் பார்வையிலே 26ம் ஆண்டு: படத்தின் ஒட்டுமொத்த பிளே லிஸ்ட்... கேட்டு பாருங்க!

   

இன்றுவரை விஜய்யும் அஜித்தும் இணைந்து நடித்த ஒரே திரைப்படம் இதுதான். இதனையடுத்து கடந்த 1997-ஆம் ஆண்டு வசந்த் இயக்கத்தில் நேருக்கு நேர் திரைப்படம் உருவானது. ஏற்கனவே ஆசை திரைப்படத்தில் வசந்த் அஜித்குமாரை நடிக்க வைத்தார். நேருக்கு நேர் படத்திலும் அஜித்தும் விஜய்யும் இணைந்து நடிக்க கமிட் ஆனார்கள்.

   

எனக்கு அதுதான் வேண்டும்.. நேருக்கு நேர் கேட்ட அஜித்.. படத்திலிருந்து விலக இதுவா காரணம்? | The reason behind Ajith's exit from Nerukku Ner Movie - Tamil Filmibeat

 

ஆனால் விஜய் நடிக்கும் கதாபாத்திரம் தான் தனக்கு வேணும் எனக்கூறி அஜித் வசந்திடம் சண்டை போட்டதாக கூறப்படுகிறது. அதனை வசந்த் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் கோபத்தில் அந்த படத்தில் நடிக்க மாட்டேன் என கூறி ஷூட்டிங் ஸ்பாட்டை விட்டு அஜித் சென்று விட்டார். அதன் பிறகு விஜய் உடன் இணைந்து அஜித்குமார் நடிக்கவில்லை.

நேருக்கு நேர்' படத்தில் சூர்யாவுக்கு முன் நடிக்கவிருந்த அந்த டாப் நடிகர் யார் தெரியுமா? – News18 தமிழ்

வசந்த் இயக்கத்திலும் எந்த படத்திலும் அஜித் நடிக்கவில்லை. பின்னர் ஒரு புது முக நாயகனை வைத்து இந்த படத்தை எடுக்கிறேன் என வசந்த் சவால் விட்டதாக கூறப்படுகிறது. அதன் படி சூர்யாவை வசந்த் அந்த படத்தில் நடிக்க வைத்துள்ளார். இதுதான் சூர்யாவின் அறிமுக திரைப்படமாகும். இந்த படத்தில் விஜய், சூர்யா, சிம்ரன், கௌசல்யா ஆகியோர் கதாபாத்திரத்தில் நடித்தனர். இதனை மணிரத்தினம் தயாரித்தார்.

There should be more short films in Tamil - director Vasanth talks! National Award