பிரபல தயாரிப்பாளரும் சன் நெட்வொர்க் நிறுவனத்தின் உரிமையாளருமான கலாநிதி மாறனின் மகள்தான் காவ்யா மாறன். ஆனால் இந்த அடையாளத்தை விட அவர் பலருக்கும் பிரபலமானது ஐபிஎல் போட்டிகள் மூலம் தான். ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியின் தலைமை நிர்வாக அதிகாரியான இவர் ஐபிஎல் தொடரில் தங்கள் அணி வீரர்கள் அடிக்கும் பவுண்டரிக்கும் சிக்ஸ்க்கும் கொடுக்கும் ஹாப்பி ரியாக்சன்களும் அணி வீரர்கள் போல்ட் ஆகி பெவிலியனக்கு திரும்பும் போது கொடுக்கும் சோக ரியாக்ஷன்களும் எப்போதுமே சமூக வலைத்தளங்களில் வைரலாகும்.
அதன் காரணமாகவே சன்ரைசர்ஸ் அணி விளையாடும் போது அங்கிருக்கும் கேமராமேன்கள் போட்டியை கவர் செய்வதை விட இவரை தான் அதிகம் கவர் செய்வார்கள். காவ்யா மாறனின் தாயார் காவேரி மாறன், சோலார் டிவி கம்யூனிட்டி ரெஸ்ட்ரிக்ட் என்ற அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கின்றார். கிரிக்கெட் மட்டுமல்லாமல் சன் குழுமத்தின் பல்வேறு நடவடிக்கைகளிலும் இவருடைய பங்கு உள்ளது. இவருடைய தாத்தா முரசொலி மாறன். திராவிட முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தவர்.
எம் பி ஆனா தயாநிதிமாறனின் மருமகளான காவ்யா மாறன் கடந்த 2012 ஆம் ஆண்டு பிகாம் முடித்த நிலையில் அதன் பிறகு 2016ஆம் ஆண்டு இங்கிலாந்தில் மிகவும் புகழ்பெற்ற வார்பிக் பிசினஸ் ஸ்கூலில் எம்.பி.ஏ பட்டம் பெற்றார். காவ்யா முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதியின் கொள்ளுப் பேத்தியும் ஆவார். சன் குழுமத்தின் ஓர் அங்கமான சன் மியூசிக் மற்றும் வானொலி பிரிவுகளையும் அவர் நிர்வகித்து வந்தார்.
மேலும் சன் நெக்ஸ்ட் ஓ.டி.டி. தளத்தைக் கட்டமைத்ததில் இவருக்கு முக்கியப் பொறுப்பு இருக்கிறது. 2018ஆம் ஆண்டு முதல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை காவ்யா மாறன் நிர்வகித்து வருகிறார். சன் குழுமத்தின் நிர்வாகக் குழுவில் காவ்யா மாறன், 2019ஆம் ஆண்டில் இணைந்தார். காவ்யா மாறன் தற்போது சன் குழுமத்தின் செயல் இயக்குநராகவும் இருக்கிறார். மேலும் காவியா மாறனின் சொத்து மதிப்பு சுமார் 40 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.