இன்றைய காலகட்டத்தில் இளம் வயதிலேயே மாரடைப்பு காரணமாக உயிரிழப்பு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. பள்ளி செல்லும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் என பலரும் மாரடைப்பால் இறக்கும் செய்திகள் அடிக்கடி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றது. என்னதான் ஒருவர் ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் தீவிர உடற்பயிற்சியை மேற்கொண்டாலும் எதிர்பாராத விதமாக மாரடைப்பால் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. அதன்படி சினிமா உலகில் மாரடைப்பு காரணமாக நம்மை விட்டு பிரிந்த திரை பிரபலங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

சேதுராமன்:
மருத்துவர் பிரபல நடிகருமான சேதுராமன் கடந்த 2013 ஆம் ஆண்டு கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். நடிகர் சந்தானத்தின் நெருங்கிய நண்பரான இவர் அவர் மூலமாகவே சினிமாவில் நடிகராக உருவெடுத்தார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து வாலிப ராஜா மற்றும் சக்க போடு போடு ராஜா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருந்த இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு தன்னுடைய 35 வயதில் திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகனும் உள்ள நிலையில் இவருடைய மருத்துவமனையை தற்போது அவருடைய மனைவிதான் கவனித்து வருகின்றார்.

புனீத் ராஜ்குமார்:
கன்னட சூப்பர் ஸ்டாரான இவர் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேற்கொண்டு வந்தது மட்டுமல்லாமல் திரையிலும் பிரபல நடிகராக விளங்கி பல குழந்தைகளின் படிப்பு மற்றும் சிகிச்சைக்கு உதவி செய்த ரியல் ஹீரோவாக வாழ்ந்து வந்தார். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு தனது வீட்டில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் இறக்கும் போது இவருடைய வயது வெறும் 46 தான். இவருக்கு கர்நாடகாவில் நினைவு மண்டபம் கட்டப்பட்டுள்ள நிலையில் அதில் தினம்தோறும் 100க்கும் மேற்பட்ட ரசிகர்கள் வருகை தந்து இவருக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

விவேக்:
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக கொடிகட்டி பறந்தவர் தான் விவேக். 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு தன்னுடைய 59 வயதில் மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்தார். இவருடைய மரணம் தற்போது வரை ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியாத இழப்பாகவே இருந்து வருகிறது.

சிரஞ்சீவி சர்ஜா:
கன்னட நடிகரான சிரஞ்சீவி ஏராளமான திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து பிரபலமானவர். தமிழில் காதல் சொல்ல வந்தேன், உயர்திரு 420, நந்தா நந்திதா போன்ற படங்களில் நடித்த நடிகை மேக்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர் தன்னுடைய 39 வயதில் கடந்த 2018 ஆம் ஆண்டு மாரடைப்பு காரணமாக மறைந்தார். இவர் உயிரிழக்கும் போது அவருடைய மனைவி நான்கு மாதம் கர்ப்பிணியாக இருந்தார். இவருடைய மரணம் கன்னட திரையுலகை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

மனோஜ் பாரதிராஜா:
தமிழ் சினிமாவின் இயக்குனர் சிகரம் பாரதிராஜாவின் மகனான மனோஜ் பாரதிராஜா மிகவும் இளம் வயதிலேயே மாரடைப்பால் நேற்று காலமானார். கடந்த வாரம் இவருக்கு இதயத்தில் ஆபரேஷன் நடந்த நிலையில் ஸ்டண்ட் பொருத்தப்பட்டிருந்தது. உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வீட்டில் ஓய்வில் இருந்து வந்த இவர் நேற்று மாலை 6 மணி அளவில் உயிரிழந்தார். 48 வயதில் உயிரிழந்த இவருடைய மரணம் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
