நடிகை காவியா அறிவுமணி 1996-ஆம் ஆண்டு ஆம்பூரில் பிறந்தார். கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் காவியா அறிவுமணி திரைத்துறையில் தனது பயணத்தை ஆரம்பித்தார். முதன் முதலில் கடந்த 2019-ஆம் ஆண்டு ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா சீரியல் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கினார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிகை சித்ரா நடித்தார். அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். இந்த நிலையில் சித்ரா இறப்பிற்கு பிறகு அவரது கதாபாத்திரத்தில் காவியா அறிவுமணி நடித்தார். அந்த இரண்டு சீரியல்கள் மூலம் காவியாவிற்கு பெருமளவு வரவேற்பு கிடைத்தது. அதன் பிறகு வெள்ளி திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

கடந்த 2022-ஆம் ஆண்டு இயக்குனர் சக்திவேல் இயக்கத்தில் உருவான மிரல் என்ற திரைப்படத்தில் கவி அறிவு மணி நடித்தார். அதன் பிறகு அருண் கார்த்திக் இயக்கத்தில் மாஸ்டர் மகேந்திரன் நடிப்பில் ரிலீசான ரிபப்பரி படத்தில் காவியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

விளம்பரம் ஆடலாக அறிமுகமான காவ்யா இப்போது சின்னத்திரை வெள்ளித்திரை என இரண்டிலும் கலக்கி வருகிறார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகள் சில நேரம் பட வாய்ப்புக்காக கிளாமராக போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார்கள்.

சிலர் பட வாய்ப்புக்காக ஓவர் கிளாமரிலும் இறங்கிவிட்டனர். இந்த நிலையில் காவியா அறிவுமணி அவ்வப்போது கிளாமராக போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். இப்போது சேலை அணிந்து கவர்ச்சியாக போஸ் கொடுத்து காவியா அறிவுமணி வெளியிட்ட ஃபோட்டோஸ் வைரலாகி வருகிறது.

