இவர் காட்டுல அடை மழை தான்.. அரைடஜன் கணக்கில் படங்களை கையில் வைத்துள்ள பிக் பாஸ் கவின்..

By Ranjith Kumar on மார்ச் 18, 2024

Spread the love

கடந்தாண்டு 2023 ஆம் ஆண்டு கணேஷ் கே. பாபு அவர்கள் இயக்கத்தில் கவின், அபர்ணா நடிப்பில் வெளிவந்து, மாபெரும் சாதனையை படைத்த படம் தான் “டாடா”. கவினுக்கு இப்பட வெற்றிக்குப் பின் தான் திரை உலகில் மாபெரும் இடத்தை தந்தது. சத்ரியன், நட்புனா என்ன தெரியுமா போன்ற படங்கள் நடித்திருந்தாலும், இதற்கு முன்னால் தனக்கென்று அங்கீகாரம் கிடைக்காமல் இருந்த கவின்,

பிக் பாஸில் கலந்து கொண்டு, அதன் பின்னதாக லிஃப்ட், டாடா போன்ற படங்களில் நடித்து தமிழ் திரை உலகில் தானும் ஒரு சிறந்த நடிகர் என்று வெளிக்கொண்டு வந்துள்ளார். கவினுக்கு சமீப காலமாக எந்த படமும் சரியாக திரையில் ஓடாமல் இருந்த நிலையில், கணேஷ் அவர்கள் இயக்கத்தில் வெளியான டாடா படத்தில் மாபெரும் வரவேற்பு மக்கள் மத்தியில் கிடைத்தது. இப்படத்தில் கவின் உடன் அபர்ணா, பாக்கியராஜ் வி.டி.வி கணேஷ் போன்ற பல பிரபலங்கள் நடித்து படத்தை ஓடுவதற்கு ஒரு உந்துகோளாக இருந்தார்கள்.

   

இந்த வெற்றியை தொடர்ந்து கவினுக்கு பட வாய்ப்புகள் பல வந்து குவிய ஆரம்பித்தது. இதற்கு அடுத்ததாக இவர் அடுத்த சிவகார்த்திகேயன் என்றே அழைக்கும் படி பிரம்மாண்ட நடிகராக வலம் வர ஆரம்பித்தார். இவர் வளர்ச்சியை கண்டு பல இயக்குனர்களும் இவர் கால்ஷீட் கேட்டு பின்னால் அலையும் நிலைமையாகி விட்டது. தற்போது இவருக்கு அடுத்தடுத்து வரிசையில் வெளியாக உள்ள படங்கள்.

   

இயக்குனர் எலான் இயக்கத்தில் கவின் நடிக்கும் படம் தான் ‘ஸ்டார்’. தற்போது இந்தப் படப்பிடிப்பு முடிவடைந்து உள்ளதாம், மே மாதம் இப்படம் வெளியாகும் என்று தகவல் தெரிய வந்துள்ளது. இதற்கு அடுத்தது கவின் ஐந்தாவது படமான ‘கிஸ்’ படம் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. அப்படத்தில் பாடல்கள் தற்போது எடுத்து முடிக்கப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை சதீஷ் என்ற புதுமுக இயக்குனர் தான் இயக்கிக் கொண்டிருக்கிறார்.

 


அடுத்த படத்தை டைரக்டர் நெல்சன் திலீப் குமார் அவர்களின் துணை இயக்குனர் சிவபாலன் தான் கவினின் ஆறாவது படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். தற்போதைய இப்படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவு அடைந்து, இன்னும் 46 நாட்கள் மட்டும்தான் ஷூட்டிங் மீதமுள்ளதாம். இன்னும் சில நாட்களில் இப்படத்தின் அப்டேட் வெளியாகும் என்று தெரிய வருகிறது. கவின் 7 படம் அடுத்த மாதம் படப்பிடிப்பு துவங்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இப்படத்தின் இயக்குனர், ப்ரொடியூசர் மற்றும் சக நடிகர்களை பற்றி அடுத்த மாதம் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்க உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.